இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையை சொல்வது என்பது ஒரு மிகச் lசிறந்த தாலந்தாகும். ஆனால், சிறந்த பிரங்கியாரும் கூட, அவருடைய வார்த்தைகள் ஆவியானவர் கொடுக்கும் சிறந்த வார்த்தைகளுக்கு ஒப்பாகாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும்கூட, உணர்ச்சியற்ற பேச்சு, இரக்கமற்ற தன்மை அல்லது தவறவிட்ட வாய்ப்புகளுக்காக நாம் போக்கு சொல்லக்கூடாது. மற்றவர்கள் சொன்னதைக் கவனிக்காமல் இருந்து அதற்காக போக்கு சொல்ல முடியாது. நமது சகோதரர்களின் தேவைகளுக்கும் ஆவிக்குரிய பிரகாரமாக ஒத்துப்போகாமல் இருப்பது ஒரு பொறுப்பற்ற தன்மையை காண்பிக்கிறது. ஏற்ற நேரத்தில் கிருபையான பேச்சால் பிறரை ஆசீர்வதிக்கும் அளவுக்கு வேதத்தை நன்கு அறியாமல் இருப்பது தன்னைத்தானே வஞ்சிப்பதாகும். வேதத்தின் வசனத்தின் வழியாய் தேவனானவர் சொல்வதைக் கேட்பதினால் மற்றவர்களுக்கு செவிக்கொடுக்கவும் அவர்களை ஆசீர்வதிக்கும்படி நம்முடைய செவிகளையும், இருதயத்தையும் அதற்கேற்ப ஒருமுகப்படுத்துகிறது .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள நல்மேய்ப்பரே, இன்று எனது பெரும்பாலான நேரத்தை ஜனங்களுடன் செலவிடுவேன். அவர்களில் சிலர் உம்மை அறிந்திருக்கிறார்கள் , ஆனால் அநேகர் உம்மை அறியாதிருக்கிறார்கள். தயவுக்கூர்ந்து ஜனங்களை உம்மண்டைக்கு கொண்டுவரும் காரியங்களை பகிர்ந்துக்கொள்ள எனக்கு ஞானத்தை தாரும் . உடைந்தவர்களுக்கு உற்சாகமளிக்கும் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளை சொல்லும்படி எனக்குக் பெலனைத்தாரும் . மயங்கித்திரியும் ஜனங்களை திரும்பி அழைத்துவர மென்மையான வார்த்தைகளை எனக்கு தாரும் . குழப்பத்தில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வார்த்தைகளை என்னிடம் தத்தருளும் . பிதாவே , இன்று நான் சொல்லும் எந்த வார்த்தைகளும் உமது சித்தத்தை பிரதிபலிக்கும் மற்றும் மற்றவர்களை ஆசீர்வதிக்க உமது நோக்கங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து