இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எரேமியா தேவனுடைய ஜனங்களுடன் தொடர்பு கொள்ள தேவன் கொடுத்த கடினமான செய்தியுடன் அநேக வேளைகளில் போராடினார். மக்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தையின் நிமித்தமாக அவர் அநேகதரம் அழுதார் மற்றும் கொடுக்கப்பட்ட செய்தியை குறித்து தேவனிடம் புகார் செய்தார். தான் குறை கூறுவது தவறு என்று தெரிந்திருந்தும், கோபத்தாலும் தண்டனையாலும் அல்லாமல், நியாயத்துடனும் இரக்கத்துடனும் தன்னைத் மாட்டாய் கண்டிக்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டினார். இந்த விண்ணப்பம் , ஒரு நல்ல நண்பர் தேவனிடம் தொடர்ந்து ஜெபிக்கும்போது, ​​தன்னுடைய பெலவீனங்களையும் தோல்விகளையும் உணர்ந்து, "என்னை மெதுவாய் தாழ்த்தும் , பிதாவே " என்று அவர் அடிக்கடி ஜெபிக்கும் அதே ஜெபம் எனக்கு நினைவுக்கு வருகிறது . கண்டிப்பு மற்றும் கிருபை நாம் மறுரூபமாக தேவைப்படுகிறது. நம்முடைய காரியங்களை காட்டிலும் தேவனுடைய காரியங்களில் இன்னும் அதிக கடின உழைப்பு மற்றும் அதிக பொறுமை தேவைப்படுகிறது. ஆகவே, அவருடைய கிருபைக்காக நாம் தேவனுக்கு நன்றி கூறுகிறோம், இது நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு , அவருடைய பரிசுத்த மற்றும் அற்புதமான பிரசன்னத்திற்கு செல்ல வழிவகை செய்கிறது , அவர் நீதியுள்ளவராகவும் மற்றும் இரக்கமுள்ளவராகவும், நியாயமுள்ளவராகவும் மற்றும் கிருபையுள்ளவராகவும் இருக்கிறார் . அதிர்ஷ்டவசமாக, கர்த்தர் நம்மைத் நம்முடைய தகுதிக் ஏற்றப் நடத்தவில்லை, ஆனால் நமக்குத் இன்னது தேவையென்று அறிந்து நடத்துகிறார் (சங்கீதம் 103:1-22). நாமும் இப்படியே ஜெபம் செய்வோம் , "கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்."

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , நான் பாவம் செய்கிறேன். நான் பாவம் செய்யும்போது அது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனாலும் எனது நீண்டகால பலவீனங்களில் சிலவற்றிற்கு நான் இன்னும் அடிபணிவதைக் காண்கிறேன். தயவு செய்து என்னைத் கண்டித்து , நீதியின் பாதையிலே வழி நடத்தும் , அன்பான பிதாவே , ஆனால் தயவுசெய்து என்னை மெதுவாகத் சிறுமைப்படுத்தி , உமது கோபத்தில் என்னைத் கண்டிக்காமல் , உமது ஒழுக்கத்தாலும் கிருபையாலும் என்னை மறுருபமாக்கும் . அன்புள்ள பிதாவே , உம்மைப் பிரியப்படுத்த விரும்புவதை விட, நான் உம்மை இன்னும் அதிகமாக கனம் பண்ண விரும்புகிறேன். எனவே, தயவு செய்து, மென்மையாகவும், தொடர்ச்சியாகவும் என் இருதயத்தின் போலித்தனம், வஞ்சகம் மற்றும் ஆத்தும பலவீனம் ஆகியவற்றிலிருந்து விடுவித்து, பரிசுத்தத்தில் என்னை மேன்மேலும் வளர்த்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து