இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அநேக நேரங்களில் மிகவும் புத்தியீனமாக இருக்கிறோம் அல்லவா! நாம் செய்ததையும், திட்டமிடுவதையும் தேவனிடமிருந்து மறைக்கிறோம். நிச்சயமாக, நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டியது , தேவன் நம் திட்டங்களை அறிந்திருப்பதும், நம் செயல்களைப் பார்ப்பதும் அச்சுறுத்தலாக உணரலாம். ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்தால், நம் நோக்கங்கள் மற்றும் எண்ணங்கள் உட்பட அனைத்தையும் தேவன் பார்ப்பது நம் உள்ளத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? இவை நீதி செய்யப்படுவதை நமக்கு உறுதி செய்கிறது, மேலும் நாம் கெடுத்துக்கொண்ட காரியங்கள் நம் நோக்கங்களின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுகிறது , மாறாக நமது தோல்விகளை கொண்டோ அல்லது எதிர்த்து நின்றதற்காகவோ அல்ல ! எல்லாவற்றிக்கும் மேலாக , நமக்கு கேடு உண்டாக்க நினைப்பவர்கள் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் ஆகவே நாம் , "பதிற்செய்வது " அல்லது "அவர்கள் செய்த பிரகாரம் " செய்வதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

என்னுடைய ஜெபம்

அப்பா, என் திட்டங்களையும் எண்ணங்களையும் உம்மிடமிருந்து மறைக்க முயன்றதற்காக என்னை மன்னித்தருளும் . என்னில் ஒரு புதிய மற்றும் பரிசுத்தமான இருதயத்தை உருவாக்குங்கள், அதனால் என் இருதயத்தில் என்ன சிந்திக்கிறேன் என்பதை நீர் அறிவதை குறித்து நான் பயப்படமாட்டேன். உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் , என் ஆவியை தட்டி எழுப்பி, உமது குணத்தையும் உமது சமூகத்தையும் என் வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்தும் . என்னை உமது மகிமைக்காக அர்ப்பணித்து, உமது ராஜ்யத்திற்கு ஊழியஞ் செய்து வாழ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து