இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நற்காரியங்களை செய்ய நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நமக்கு பரிசுத்த வேதாகமத்தை கொடுத்தார். இன்று நாம் வேதாகமத்தை பல்வேறு மொழிகளிலும், பேச்சுவழக்குகளிலும், பதிப்புகளிலும் மொழிபெயர்த்துள்ளோம். அச்சுறுத்தலை விட, இது ஒரு பெரிய ஆசீர்வாதம். ஆனால் வேதத்தின் நோக்கம் இதை படித்து அறிவாளிகளாய் இருப்பது மாத்திரமல்ல , அதன்படியாய் வாழ்வதே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையை நிதர்சனமான சத்தியமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார் - ஒவ்வொரு நல்ல வேலையைச் செய்வதற்கும் நம்மை ஆயத்தப்படுத்தும் ஈவாக இது இருக்கிறது .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே , நீர் உண்டாக்கின ஜீவராசிகளில் எங்களுடன் மாத்திரமே உம் சொந்த வார்த்தைகளை பேச தேர்ந்தெடுத்ததை குறித்து எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. உம்முடைய வார்த்தையைப் படித்து உம் சத்தியத்தை கற்றுக்கொள்ளும் பெரிய தாலந்தை நான் ஒருபோதும் லேசாக எண்ணிவிடக்கூடாது. ஆனால் பிதாவே , அதை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான குணத்தையும் தைரியத்தையும் எனக்கு தாரும் , உமது சித்தத்தைச் கிரியையினால் நடப்பிக்க என்னை வழிநடத்தும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.