இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பின்தொடரும் பெரும்பாலான காரியங்கள் கடந்துப்போகக்கூடியவை . நாம் அதைப் பெற்றவுடன், அதைப் பாதுகாக்க முயற்சிப்போம்! ஏன்? ஏனென்றால் அது விரைவில் மறைந்துவிடும் என்பது நமக்கு தெரியும். தேவன் நித்தியமானவர் என்றும் சதாக்காலமும் வாழ்வார் என்றும், அவருடனே கூட உறவைத் தொடர்பவர்களும் அவருடைய சித்தத்திற்கு ஒப்புவிப்பவர்களுக்கு, அவரோடே கூட நித்திய காலமாக வாழ்வோம் என்று நமக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். எனவே, நாம் நமது நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதைப் பார்ப்போம். பிறகு, நாம் பின்பற்றுவது மெய்யாகவே மேன்மையான காரியமா என்று நம்மை நாமே கேட்போம். இப்போது, ​​இன்னும் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்போம்: "அது மேன்மையான காரியமாக இருந்தாலும், அது நம் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நீண்ட காலம் நீடிக்குமா?"

என்னுடைய ஜெபம்

நித்தியமான பிதாவே, என் வாழ்க்கையில் நான் எதை பின்பற்றுகிறேன் என்பதில் உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு தைரியத்தை தாரும் . அவைகள் உமக்கடுத்த காரியங்களுக்காக இருக்கும்படி நான் அதை எண்ண விரும்புகிறேன். நான் நல்ல மாற்றத்தை உண்டுப்பண்ண விரும்புகிறேன். அந்த ஆசைகளில் சில, சுயமான காரியங்கள் என்று நான் ஒப்புக்கொள்கிறேன. இருப்பினும், அன்பான பிதாவே , மற்றவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் மற்றும் உமக்கு கனத்தை தரும் வாழ்க்கையை நான் மெய்யாயாகவே வாழ விரும்புகிறேன். நீடிக்காத அல்லது முக்கியமில்லாத விஷயங்களை பின்தொடர்ந்து என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது முன்னோர்களின் வீண் பாரம்பரிய காரியங்களை பின்தொடர்வதை விட, உம்முடைய சித்தத்தை பின்பற்றி, உம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கையைக் கண்டுபிடிக்க எனக்கு ஆவிக்குரிய ஞானத்தை தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து