இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
காலங்கள் மாறும்போது, இலைகள் உதிர்ந்து, புல் உலர்ந்து போகிறது , அவைகள் நம் வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்துகிறது . தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நமது ஆழமான தேவைகள் வேதத்தில் உள்ள நித்திய மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய சித்தத்தால் மட்டுமே தீர்க்கப்படுகின்றன. உங்கள் கைபேசி(மொபைல் ) செயலியிலுள்ள வேதாகமத்திலிருந்தோ அல்லது பழைய குடும்ப வேதாகமத்திலிருந்தோ உங்கள் வேதத்தை நீங்கள் பெற்றாலும், இன்றே அதை எடுத்து பயன்படுத்தவும் . இந்த நாளுக்குரிய நித்தியத்திற்கான கருத்தை நீங்கள் வாசித்து பெற்றுக்கொள்ள வேண்டாமா?
என்னுடைய ஜெபம்
நான் வயது சென்றவனாகும் போது, தேவனே , குறுகிய காலம் இப்பூமியில் நான் தங்கியிருப்பதையும், பரலோகத்தில் உமது நித்திய ஆட்சியையும் நான் தொடர்ந்து நினைவுபடுத்துக் கொள்கிறேன். உமது வார்த்தையில் உமது சித்தத்தை நான் தேடும் போது, உமக்கு முன்பாக எனக்குரிய இடத்தை எனக்கு உணர்த்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.