இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் முன்னதாக சென்று, நம்மை இரட்சிக்க அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றதை ஜீவபலியாக கொடுத்ததால் , அவர் நம்மை அவரிடம் ஒப்புகொடுக்கும்படி கேட்கலாம். ஒரே ஒரு தடை என்னவென்றால் : பழைய ஏற்பாட்டின் பலி செலுத்துதல் பலிபீடத்தில் இருந்து வலம் வர விரும்புகிறது. நாம் ஒவ்வொரு நாளும் நம்மையும் , நம் விருப்பத்தையும் , நம் நேரத்தையும் , நம் இருதயத்தையும் , நம் அர்ப்பணிப்பையும் , தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.அப்படி செய்யாமற்போனல் , பலிபீடமும் வெறுமையாயிருக்கும் , நம்முடைய பலியும் வீணாயிருக்கும் .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள இரட்சகரே, என் ஜீவனையும்,சரீரத்தையும், விருப்பத்தையும் உம்மிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். ஆனால் நான் ஒப்புக்கொள்கிறேன், அந்த பலிபீடத்தின் மீது நான் எப்போதும் வைக்காத சிறிய தவறுகள் (சில பெரிய தவறுகளாக இருக்கலாம்). அவைகளை நான் விட்டுவிட விரும்பாத காரியங்களாகும் . என்னால் கூடுமான மட்டும் , உமது கிருபை மற்றும் கட்டுப்பாட்டிற்குள் வெளியே இல்லாத வகையில் என் வாழ்க்கையை இன்று உமக்காக வாழ்வேன். இன்றும், என்னிடம் உள்ள அனைத்தும் என்றும் உம்முடையதாக இருப்பதற்காக - என்னையும் மற்றும் என்னிடம் உள்ள அனைத்தையும் நான் உமக்காக பலியாய் ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.