இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பூமிக்குரிய இஸ்ரவேலருக்கு இந்த பழமொழியின் வாக்குறுதி கல்வாரி மற்றும் காலியான கல்லறைக்கு பிற்பாடு வாழும் நமக்கு இன்னும் உறுதியான சத்தியமாய் இருக்கிறது! அப்போஸ்தலனாகிய பவுல் அறிவித்தபடி: நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் :3-20,21) நீதிமான் தங்கள் மெய்யான தாயகமான பரலோகத்திலிருந்து ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை , ஏனெனில் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நகரத்தை யாராலும், எந்த சக்தியாலும் திருட முடியாது. அவர்களால் அதைக் கெடுக்கவோ அழிக்கவோ முடியாது!

என்னுடைய ஜெபம்

இயேசுவின் தியாகமான மரணத்தினாலும், அவருக்குள் அடியேன் கொண்டுள்ள கீழ்ப்படிந்த விசுவாசத்தினாலும் என்னை நீதிமான் என்று அறிவித்ததற்கு நன்றி பிதாவே . இந்த கிருபையின் காரணமாக, நான் உம்முடைய நித்திய குடும்பத்திலும் உம் நிலையான நகரத்திலும் சேர்க்கப்பட்டுள்ளேன் என்பதை நான் அறிவேன். பரிசுத்த ஆவியானவர் என்னை ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அவரைப் போல் மறுருபமாக்கும்படி தயவாய் கேட்கிறேன் . நான் வாக்களிக்கப்பட்ட நித்திய வீட்டிற்காக காத்திருக்கையில், உமது மகிமைக்காக நான் சொல்வதிலும், நினைப்பதிலும், கையிட்டு செய்வதிலும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து