இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்!" என்று அசுத்த ஆவி பிடித்திருந்த சிறுவனின் தந்தை இயேசுவிடம் கூறினார் (மாற்கு 9:24). இதுவே சில சமயங்களில் உங்கள் ஜெபமாகவும் இருக்கலாம்! எபிரேயர் 11:2-40-ல் உள்ள விசுவாசத்தின் பெரிய வீரர்களை பார்க்கும்போது - இது மேலே கூறின வசனத்தைப் பின்பற்றுகிறது - இது அவர்களின் ஜெபமாகவும் இருந்திருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அவர்களின் நம்பிக்கை எப்போதும் சரியானதாக இல்லை. அவர்களின் நம்பிக்கை எப்போதும் முதிர்ச்சியடையவில்லை. ஆனால் அவர்கள் அதில் தங்கினார்கள்; எப்படியாவது, எந்த விதத்தினாலாவது , தேவன் அவர்களது விசுவாசம் மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு விடுவிப்பார் என்று இடைவிடாத உறுதியுடன் அவர்கள் நம்பினர் மற்றும் செயல்பட்டனர். இரட்சகரைப் பார்த்து, "விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்" என்று ஜெபிக்கும்போது, ​​நம்முடைய தேவனின் உண்மைத்தன்மையில் நம்முடைய உறுதியை "அசையாமல் உறுதியாய் பிடித்துக்கொள்வோம்".

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , "விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்." தயவு செய்து எனது நம்பிக்கையை முதிர்ச்சியடையச் செய்து வலுப்படுத்துங்கள், அதனால் எனது வாழ்க்கை உம்முடைய சமூகத்துக்கும், கிருபைக்கும் உறுதியான மற்றும் நிலையான சாட்சியாக எப்பொழுதும் இருக்கும். இவை யாவற்றையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து