இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உண்மையுள்ள கீழ்ப்படிதலின் கட்டளையானது எப்போதும் பரிசுத்த வேதாகமத்தில் ஒரே மாதிரியாக உள்ளது: தேவன் நமக்கு தம்மை வெளிப்படுத்துகிறார், அவருடைய கிருபையால் நம்மை ஆசீர்வதிக்கிறார், பின்னர் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்படி கேட்கிறார். வேறுவிதமாக கூறுவோமானால் முதலாவது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார், பிறகு அவருக்கு கீழ்ப்படியும்படி கேட்கிறார் - கீழ்ப்படிதலுக்கு முன்பாக தேவனுடைய கிருபை எப்பொழுதும் வருகிறது ! தேவன் சர்வவல்லமையுள்ளவர் மற்றும் மகா பெரியவரும் அவரே . அவர் நம்மை சிருஷ்டித்தவர் என்பதற்காக நம் கீழ்ப்படிதலை வற்புறுத்தலாம் , ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் தம்மை வேதவார்த்தையின் மூலமாக , இயற்கையின் வழியாக , இரட்சிப்பின் திட்டத்தினால் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக தம்மை முழுமையாக இயேசுவை கொண்டு வெளிப்படுத்தினார் . நாம் அவரை அறிந்து அவருக்கு எப்பொழுதும் முழுமையாக கீழப்படிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்முடைய கீழ்ப்படிதல் நமக்கு கடினமாக இருக்கலாம். கீழ்ப்படிவதற்கான நமது அழைப்பு சில சமயங்களில் நமக்குப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். எவ்வாறாயினும், நம்மை ஒரு மகத்தான விலையைச் செலுத்தி , மீட்டுத் தன் சொந்த குடும்பத்தில் சுவிகாரபுத்திரராக்கிக் கொண்ட நம் பரம தகப்பனிடமிருந்து இந்த அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம் , மேலும் அவர் தம்மை கிருபையும் உண்மையும் உடையவர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு நாம் கீழ்படிவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துக் கொள்வோம் .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே, நீர் எல்லா மகிமைக்கும் கனத்துக்கும் பாத்திரர். நான் பரிசுத்தமாக இருக்க வேண்டும், உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும் மற்றும் உம் சித்தத்தை நாட வேண்டும் என்கிறதே உம் விருப்பமாயிருக்கிறது, அந்த விருப்பம் அடியேனை நேசிக்கவும் மற்றும் ஆசீர்வதிக்கவுமே அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன். முழுஇருதயத்துடன் உமக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன். உம்முடைய ஆசீர்வாதங்கள் யாவும் என்னுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதைப் போல, எனது கீழ்ப்படிதல் மகிழ்ச்சியுடனும், கிருபையுடனும் உமக்கு கொடுக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.