இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு புதிய உடன்படிக்கை - தேவன் வாஞ்சையுடன் நம்முடன் ஒரு புதிய உடன்படிக்கை மேற்கொண்டார் , அவருடைய சிருஷ்டிப்புகள் , அவர்களை அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டு, இந்த புதிய உடன்படிக்கையின் வாழ்க்கையை வாழ நமக்கு பெலன் கொடுக்க ஆவியானவரை அனுப்பினார். தேவன் நம்மோடு அன்போடும், கிருபையோடும் உடன்படிக்கை செய்துள்ளார். சர்வவல்லமையுள்ளவர் மறுபடியுமாய் , அந்த உடன்படிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை தகுதியுடனும் திறமையுடனும் ஆக்கினார். இது ஜீவனைக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை: அது நமக்கும் நம் மூலமாகவும் ஜீவனைக் கொண்டுவருகிறது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் மகத்துவமுமுள்ள தேவனே , பாவத்திலிருந்து என்னை இரட்சித்து , பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திலிருந்து என்னை மீட்டெடுத்த உமது கிருபைக்காக உமக்கு நன்றி. உம் குமாரனின் ஈவையும், உம் ஆவியின் வரத்தையும் அனுப்பியதற்காக நன்றி, அதனால் நான் ஜீவனோடும் , கிருபையோடும் மற்றும் அன்போடும் உம்முடனான உடன்படிக்கையில் வாழ முடியும். எனது பலவீனங்களை நான் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், உம்முடைய ஜீவபலி , அன்பு மற்றும் உடன்படிக்கையை கனப்படுத்தும் வகையில் நான் வாழ்வேன் என்று உறுதியளிக்கிறேன், இறுதியில் நீர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுபோலவே இருக்க எனக்கு அதிகாரம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து