இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய ஞானஸ்நானமானது தண்ணீரில் மூழ்குவதை விட அதிகமானது என்பதை பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் இயேசுவினுடைய மரணம், அடக்கம், உயிர்தெழுதலில் பங்கடைகிறோம். அவர் நம்மைக் இரட்சிக்க என்ன செய்தார் என்பது இப்போது நம்முடனே கூட பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நாம் பாவத்துக்கு மரித்து , முற்றிலுமாய் கழுவி பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவராலே அதிகாரம் பெற்று ஒரு புதிய மனிதனாக ஜெநிப்பிக்கப்பட்டோம். மரண கட்டுகளிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே இயேசுவுக்குள்ளாய் ஒரு புதிய ஜீவனை தந்தமைக்காக உமக்கு நன்றி. உனது கிருபையினால் என் மீறுதல்கள் மறைக்கப்பட்டதற்காக என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். பாவத்தினின்று விடுதலைப் பெற்று என் வாழ்க்கையை வாழ பெலனைத் தந்தருளுமாறு உம்மிடம் கேட்கிறேன். அநேக நேரங்களில் ஞானமற்றவனாய் பாவத்திலே உழன்று வாழ்ந்தமைக்காக அடியேனை மன்னியும். உம்முடைய சித்தத்திற்கு மாறாக என்னுடைய இருதயத்தை திசைத்திருப்பும், என் ஆத்துமாவை கறைப்படுத்தும் எந்த ஒரு காரியத்தையும் கடினமாய் அருவருக்கதக்க ஞானத்தை தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து