இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மேசியாவின் பிரசன்னத்தின் தெளிவான அடையாளம், அவரை அறிந்த மற்றும் பின்பற்றிய அனைவருக்கும் மெய்யான ஆசீர்வாதத்தின் காலமாகும். அவரது செயல்கள் - அவரது அற்புதங்களும் இரக்கமும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது - எதிர்பார்க்கப்பட்ட மேசியாவின் வருகையை மிகவும் மகிமையாகக் காண்பித்தது . இந்த காரியம் அவருடைய முதல் வருகையில் இது உண்மையாக இருந்தால், கர்த்தருடைய மக்கள் அவர் தம்முடைய மகிமையில் மறுபடியுமாய் திரும்பும்போது எவ்வளவு மகிமையுடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்! இயேசு பிரசங்கித்த அதிக எதிர்பார்ப்புடன் கூடிய ஓர் செய்தி என்னவென்றால் , நான் மறுபடியுமாய் வந்து தம்முடைய சீஷர்கள் யாவரையும் பிதாவினிடத்தில் கொண்டுபோய்த் சேர்ப்பேன் என்றதான ஓர் நற்செய்தி !
Thoughts on Today's Verse...
The clear sign of the Messiah's presence was a time of true blessedness for all who knew and followed him. His actions — his miracles and compassion shared with others — gloriously displayed the anticipated Messiah's coming. If this was true with his first coming to earth, imagine how much more gloriously blessed the Lord's people will be when he returns in his glory! The good news preached by Jesus is the anticipation of even more fantastic news when he returns to take his disciples home to the Father!
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனே , இயேசுவின் முதலாம் வருகையினால் உண்டான ஆசீர்வாதத்தின் நேரத்திற்காக நான் உம்மை போற்றுகிறேன். எங்கள் இரட்சகர் மகிமையுடன் திரும்பி வரும்போது, அவருடைய வருகையிலும், அவருடைய சீஷர்களுக்கும், கிறிஸ்துவுக்குள் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கும் காத்திருக்கும் மகிமையான ஆசீர்வாதங்களில் இன்னும் பெரிய மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன். அந்நாளை எதிர்பார்த்து, என் இரட்சகரும், ராஜாவும், நண்பரும், ஆண்டவருமான இயேசுவின் நாமத்தினாலே நான் உமக்கு நன்றியையும் துதியையும், ஸ்தோத்திரங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.
My Prayer...
Lord God Almighty, I praise you for the time of blessing that accompanied Jesus' first coming to earth. I anticipate even greater rejoicing at his return and the glorious blessings that await his disciples, my brothers and sisters in Christ, when our Savior returns in glory. In anticipation of that Day, I thank and praise you in the name of Jesus, my Savior, King, Friend, and Lord. Amen.