இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் ஏன் தேவனுக்கு ஊழியம் செய்கிறோம்? பயமா? கடமை உணர்வா ? அல்லது நம் பெற்றோர் செய்ததால் நாமும் செய்கிறோமா ? நாம் நம் தேவனைப் பிரியப்படுத்தவும், அவருக்கு ( பிதாவுக்கு )மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் விரும்புவதால் செய்கிறோமா ? தேவன் இம்மட்டுமாய் நமக்காக என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்று நாம் நம்புவதால் செய்கிறோமா? நாம் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படி அனுப்பினார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் , அதனால் நாம் மன்னிக்கப்படவும், சுத்திகரிக்கப்படவும், அவருடைய பிள்ளைகளாக என்றென்றும் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் முடியும். மேலும், தேவன் தமது ஆசீர்வாதங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அவருடைய கிருபையையும் அன்பையும் நம்புபவர்களுக்கு நன்மைகளை அளிக்க விரும்புவதாகவும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விசுவாசிக்கிறோம் ! எனவே, நாங்கள் அவரைத் தீவிரமாக, விடாமுயற்சியுடன், ஆர்வத்துடன் தேடுகிறோம்!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , என் நம்பிக்கைக்கும், உம்மையும் உமது கிருபையையும் அறிந்துகொள்ள எனக்கு உதவிய அனைவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன் . இந்த நம்பிக்கையை எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள முயலும் போது தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலில் வெளிப்பட்ட உமது வல்லமையின் காரணமாக என் வாழ்வு உமது அன்பில் பாதுகாப்பாகவும் ஜெயத்துடனும் இருக்கிறது என்ற நம்பிக்கைக்காக நன்றி. அவருடைய நாமத்தினாலே, நான் உமக்கு என் நன்றிகளையும் , ஸ்தோத்திரத்தையும் , உள்ளத்தின் ஆழத்திலிருந்து செலுத்தி, ஜெபிக்கிறேன் . ஆமென்.