இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவே ஆண்டவர் ! தேவனின் திட்டம் கிறிஸ்துவுக்குள் கூட்டப்படவேண்டுமென்று இருந்தது. தேவனின் திட்டம் கிறிஸ்து ஏற்ற நேரத்தில் வருவதை மையமாகக் கொண்டது. கிறிஸ்துவை அனைவருக்கும் ஆண்டவராக ஆக்குவதன் மூலம் கிறிஸ்துவுக்குள் ஐக்கியத்தைக் கொண்டுவருவதே தேவனின் திட்டம்! மேலும், நமது இரட்சிப்பைக் கொண்டுவரும் இந்தத் திட்டம் தேவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நம்முடைய தேவன் மட்டுமே இரட்சிக்கும் தேவன் . இயேசு நமது இரட்சகரும் ஆண்டவரும் ஆவார். எனவே இன்று நாம் எதிர்கொள்ளும் மெய்யான பிரச்சினை என்னவென்றால் : நமது வாழ்வின் எந்தப் பகுதி, நம்முடைய இருதயங்கள், நமது இரகசியங்கள், நம்முடைய பாவம் , நாம் எதிர்த்துநிற்கும் காரியங்கள் ,இவைகளை நாம் அவருடைய ஆளுகைக்கு ஒப்புவிக்கவில்லையா ?
என்னுடைய ஜெபம்
விலையேறப்பெற்ற பிதாவே , என் இருதயம் வஞ்சகமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். சில சமயங்களில் என்னை நானே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் நான் உம்முடைய சமூகத்தில் முழங்கால் படியிட்டு உம் வார்த்தையினால் குத்தப்பட்ட போது, உம் கட்டுப்பாட்டிற்கும் இயேசுவின் ஆளுகக்கும் நான் இன்னும் முழுமையாக ஓப்புக்கொடுக்காத பகுதிகளை நான் நினைவுபடுத்தி கொள்ளுகிறேன் . தயவு செய்து, அன்பான பிதாவே, பரிசுத்த ஆவியானவரைப் பயன்படுத்தி, என்னுடைய சுய-வஞ்சகத்தை மெதுவாகக் காட்டி, என்னுடைய தவறுகளை புரிந்துகொண்டு, உம்முடைய சித்தத்தில் நான் முழுவதுமாக அர்ப்பணிப்பேன் . கர்த்தாதி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.