இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதிமான்களாகவும், தேவனையும் அவருடைய குணாதிசயத்தையும் கனம்பண்ண வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இதைவிட மேலான ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குறுதியை உங்களால் சிந்தித்து பார்க்க முடியுமா? தேவனை முகமுகமாய் காண்போம்! என்ன ஒரு ஆசீர்வாதம் ! என்ன ஒரு எதிர்காலம்! என்ன ஒரு ஆச்சரியமான பிதாவானவர் ! ஆகவே, நம்முடைய பிதாவாகிய தேவனையும், கர்த்தராகிய ஆண்டவரையும் , முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும், தேவனுடைய எல்லா மகிமையோடும் அவரை முகமுகமாய் காணும்வரை அவரை எப்பொழுதும் தேடுவோம் (1 யோவான் 3:1-3. ) ஏன்? ஏனென்றால், அவர் நீதியுள்ளவராகவும், அவர் நீதியை நேசிக்கிறவராகவும் இருக்கும் நம்முடைய தேவனை நாம் நேசிக்கிறோம், .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , எல்லா காலங்களுக்கும் சர்வவல்லமையுள்ள ராஜாதி ராஜா , உம்முடைய மகத்தான மற்றும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளுக்காக நன்றி. உம்முடைய நீதிக்காக நன்றி. நீதியின் மீதான உம்முடைய அன்புக்காக நன்றி. உம்முடைய கிருபைக்காக, இரக்கத்திற்காக நன்றி. உம்முடைய எல்லா மகிமையிலும், உம்முடைய நித்திய பிரசன்னத்தில் என்றென்றும் பங்குகொள்ளும், இயேசுவோடு உம்மை முகமுகமாய் காணும் அந்த நாளுக்காக நான் உண்மையாக எதிர்நோக்குகிறேன்! இயேசுவின் நாமத்தினாலே , அடியேன் உம்மை போற்றி, துதித்து நன்றிசெலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து