இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் அவருடைய சித்தத்திற்குக் முழுவதுமாக கீழ்ப்படிய வேண்டும் என்று பரலோகத்தின் தேவன் விரும்புகிறார், அந்த சித்தம் அது தன்னிச்சையானது, தூண்டுதல் அல்லது நியாயமற்றது அல்ல. நாம் அவருடைய குணாதிசயத்தை பிரதிபலிக்க வேண்டும், அவருடைய ஆசீர்வாதத்தில் சார்ந்திருக்க வேண்டும், அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும்போது நமது சுதந்திரத்தை மீட்டெடுக்க அவருடைய பெலத்தைப் பெற வேண்டும் என்று நம்முடைய ஆவிக்குரிய தகப்பன் விரும்புகிறார். அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற அவரது அழைப்பை நாம் செய்ய வேண்டிய ஓர் கடமை என்று மட்டும் பார்க்காமல், தேவனின் கிருபையில் நாம் கண்டுபிடிக்கும் ஆசீர்வாதத்தின் வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கான வாய்ப்பாகப் பார்ப்போம். தேவன் நம்மை வழிநடத்திச் செல்ல விரும்புகிற கிருபையின் புதிய எல்லைகளை நாம் கண்டுபிடிக்கவே, அவருக்குக் கீழ்ப்படியும்படி அவர் நமக்கு கட்டளையிடுகிறார்.
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவாகிய தேவனே , உமது சித்தத்தை வெளிப்படுத்தியதற்காகவும் , அதற்குக் கீழ்ப்படிய என்னை அழைத்ததற்காகவும் நன்றி. உம்முடைய மேலான ஆசீர்வாதங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும், உம் நித்திய மகிமையின் பிரசன்னத்திற்கு என்னைக் கொண்டுவரவும் நீர் விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன். நான் உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதைத் தேர்வு செய்கிறேன், அதினால் உம் கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாக எனக்குக் கொடுக்க விரும்பும் வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கான வலிமையை நான் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் நாமத்தினாலே , உமக்கு நன்றிகளை கூறி, ஜெபிக்கிறேன் . ஆமென்.