இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒரு தாக்கத்தை விட்டுசெல்கிறோம். கர்த்தர் நம் வாழ்க்கையில் சந்திப்பதற்கும் மற்றும் தாக்கத்தை உண்டு பண்ணுவதற்கும் கொண்டுவந்த அனைவரின் மீதும் அழியாத தடயத்தை நம் வாழ்க்கையின் மூலமாக ஒரு தாக்கத்தை விட்டுச்செல்லுகிறோம் . இன்றைய நீதிமொழிகள் நம்முடைய வாழ்க்கையின் தாக்கம் நமது மாம்ச சரீரத்திற்கு பிறகும் (அதாவது மரணத்திற்கு பின்னும்) வாழும் என்பதை நினைப்பூட்டுகிறது, மேலும் அந்த தாக்கம் எதிர்கால சந்ததியினரை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை நாம் ஞானமாக சிந்திக்க வேண்டும். நம் வாழ்வு நீதியுள்ளதாக இருந்தால், அந்த தாக்கம் , கிருபையின் நிகழ்வாக வருங்கால சந்ததியினருக்கு பகிரும்போது , ​​அது ஒரு தொடர்ச்சியான ஆசீர்வாதமாக இருக்கும். மறுபுறம், நம் வாழ்வு அக்கிரமம் நிறைந்ததாக இருந்தால், ஒரு பயனுள்ள பொருள் புளித்து போய்விட்டது போல அல்லது நீடித்திருக்கவேண்டிய காரியம் கெட்டுப்போவதற்கு மற்றும் அழிந்துபோய் நீடித்த துர்நாற்றத்தை விட்டுசெல்வோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நான் என் மாம்ச தோற்றம் மறைந்த நீண்ட நாட்களுக்குப் பிறகும் என் வாழ்க்கையானது என் பிள்ளைகளுக்கும் மற்றும் என் பேர பிள்ளைகளுக்கும் இனிமையான ஆசீர்வாதமாக இருக்கட்டும். இது ஆவிக்குரிய பிரகாரமாகவும் இன்னுமாய் மாம்ச பிரகாரமாகவும்இவைகள் மெய்யாக இருக்கட்டும். என் வாழ்க்கையின் தாக்கம் மற்றவர்கள் உம்மையும் உன் கிருபையும் அறியவும் அது உமக்கு புகழ்ச்சியும் மகிமையும் கொண்டுவருவதாக இருக்கட்டும் . என்னுடைய தாக்கம் எவ்வளவு தூரம் மற்றவர்களை பாதிக்கும்என்ற அளவை நான் பார்க்கத் தவறினால் அல்லது நினைவில் கொள்ளத் தவறினால் அதற்காக அடியேனை மன்னித்தருளும் , மேலும் உம்முடைய கிருபையினால் தொடுவதற்கு நீர் வேண்டுமென்றே அனுப்பியவர்களைக் காண என் மனக் கண்களை திறந்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து