இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலகத்தின் கடைசி நாளின் போது மேசியாவின் மகிமையான வருகையின் அற்புதமான நேரத்தை ஏசாயா விவரிக்கிறார் (ஏசாயா 11:1-9). நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிவோம், மேலும் தேவனை அறிந்த விசுவாசிகளின் கூட்டம் மகிழ்ச்சியுடன் அவரை துதித்து பாடும். அவருடைய பாதுகாப்பை அனுபவிப்போம், பயமின்றி இருப்போம். சமுத்திரங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு தேவனை பற்றியதான அறிவு இன்னும் அதிகமாக இருக்கும். தேவனை அறிந்தவர்களால் பூமி நிறைந்திருக்கும். எல்லா படைப்புகளும் மீட்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளின் மகிமையான சுதந்திரத்தை அனுபவிக்கும் (ரோமர் 8:18-21). அந்த நாளை எதிர்ப்பார்ப்போம், தேவனை பின்தொடர்வதில் நம் இருதயங்களில் இணைவோம் - அவரை அறிந்துகொள்ளவும், அவர் நம்மீது பொழிய விரும்பும் அன்பை அனுபவிக்கவும். தேவனை பற்றிய உண்மையான அறிவை மட்டும் பெறாமல், அவருடைய ஊழியம் , குணம், கிருபை , அன்பு ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் அவரை உண்மையாக அறிந்து கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , தயவுசெய்து என்னை உம் அருகில் கொண்டு வாரும் . இன்று என்ன வந்தாலும் உம் சமூகத்தை நான் அனுபவிக்க வேண்டும். அவருடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றான என்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் என் நித்திய மேய்ப்பராக உம்முடைய குமாரன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியதை விசுவாசித்து அந்த விடியும் நாளுக்காக நான் காத்திருக்கையில், உம்மை என் மீட்பர், இரட்சகர் மற்றும் நண்பராக அறிய விரும்புகிறேன், அந்த மகிமையான நாளின் விடியலை நான் எதிர்பார்க்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து