இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எனது சிறு பிரயாயத்திலே மேற்கு டெக்சாஸில் வளர்ந்த நான், "வறண்ட நிலம் " என்றால் என்னவென்று நிச்சயமாக அறிவேன். கருமையான மண் சுருங்கி அல்லது வறண்டு , நிலத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்துகிறது. அனைத்து புல் மஞ்சள் நிறமாகவும், பின்னர் பழுப்பு நிறமாகவும் மாறி இறந்தும் விடும். தென்றல் காற்று தரிசு நிலத்தின் மீது வீசி தூசியை சுழலச் செய்கிறது. மழை இறுதியாக வரும்போது, ​​மழை ஈரமான பரப்புகளில் இருந்து ஓடி, வறட்சியின் ஆழமான விரிசல்களுக்குள் நுழைவதால், "வறண்ட நிலம்" அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுகிறது . நிலம் நீரை உள்வாங்கி வைத்துக்கொண்டு , புல் மீண்டும் உயிர் பெறுகிறது, நிலப்பரப்பு நிரப்பப்படுகிறது. ஒரு வறண்ட ஆவிக்குரிய பாழான நிலத்தில், தேவன் பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஆசீர்வாதத்தை பொழிகிறார் , புத்துணர்ச்சிக்கான காலத்தை கொண்டு வருகிறார், மேலும் தாகமுள்ள நம் இருதயங்களை நிரப்புகிறார். கர்த்தர் ஏசாயாவுக்கு கூறின வாக்குத்தத்தத்தை இயேசுவானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார் : இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். யோவான்-John -7 : 37 - 39

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமுள்ள மற்றும் அன்பு நிறைந்த பிதாவே , நீர் என் வாழ்க்கையில் பொழிந்த அநேக ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பான பிதாவே , உம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக நீர் அருளின உமது பிரசன்னத்தின் ஆசீர்வாதத்திற்காகவும் , உமது பெலத்திற்காகவும் , உமது கிருபைக்காகவும் , உமது புத்துணர்ச்சிக்காகவும் நன்றிசெலுத்துகிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து