இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில சமயங்களில், தேவனின் ஆசீர்வாதங்களுக்கு மிக முக்கியமான வாய்ப்புகள் உள்ளவர்கள் அவரை நிராகரித்து, தங்கள் கடந்தகால பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பாவப் பழக்கங்களுக்குள் திரும்புகிறார்கள். தேவனையும் அவருடைய விருப்பத்தையும் அவர்கள் நிராகரித்ததினால் உண்டாகும் விளைவுகள் மிகப்பெரியவை. இஸ்ரேலும் யூதாவும் பழைய உடன்படிக்கையிலிருந்து இக்காலத்திலே நமக்கு கொடுக்கப்படும் முன்மாதிரியான எச்சரிக்கைகள். கடந்த பத்து நாட்களாக நம்முடைய பக்தி ஆராதனைகளில், தேவனின் பிள்ளைகளாகிய நம்முடைய மகிமையான எதிர்காலத்தை எதிர்பார்த்து, கிறிஸ்துவோடு நடக்கையில் நமக்கு என்ன நடக்கப்போகிறது என்ற வாக்குறுதிகளை குறித்து படித்துவந்தோம் . துரதிர்ஷ்டவசமாக, சிலர் ஒருபோதும் கிருபையின் ரயிலில் ஏறுவதில்லை. அவர்கள் தேவனை ஒருபோதும் பின்பற்றுவதில்லை. அவர்கள் இயேசுவை நம்பவில்லை. அப்படி செய்பவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்கள் தேவனை நிராகரித்து, நம்மைப் பற்றிய அவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது, வார்த்தையில் மட்டுமல்ல, இருதயத்திலும் கிரியையிலும் தேவனின் அழைப்புக்கு நிச்சயமாக உண்மையுள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்வோம்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, நான் உம்முடன் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனாலும், அன்பான பிதாவே , உண்மையாக வாழ்வதில் நான் அநேக சவால்களை எதிர்கொள்கிறேன். எனக்கு முன் சென்று உமக்கு எதிராக கலகம் செய்த சிலரின் தீய மற்றும் பாவமான பழக்கங்களில் நான் விழ விரும்பவில்லை. உமக்கு முழு மனதுடன் ஊழியம் செய்தவர்களைப் போல இருக்கவும், என் எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் இயேசுவோடு மகிமையுடன் தழுவிக்கொள்வதற்கும் என் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள் (கொலோசெயர் 3:1-4). தயவு செய்து, அன்பான பிதாவே , உமது விருப்பத்திற்கு நான் முழு மனதுடன் என்னை ஒப்படைப்பதால், எந்த அசுத்தமான செயல் அல்லது சிந்தனையிலிருந்து என்னை விடுவித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.