இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அனைவரும் ஒன்று!" பவுல் கலாத்தியா சபை மக்களிடம் இப்படி கூறினார் (கலாத்தியர் 3:26-29). இருப்பினும், சாத்தான் தொடர்ந்து தேவனுடைய மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறான். குடும்பங்களாக இருந்தாலும் சரி சபை நடுவே இருந்தாலும் சரி - ஆண்களையும் பெண்களையும் பிரிப்பதே அவனது மிகவும் சிறந்த பிரிவினை வழிமுறைகளில் ஒன்றாகும். இயேசு நம்முடைய கர்த்தராக இருந்தால், ஆண்களாகவும் பெண்களாகவும் ஒருவருக்கொருவர் தேவைப்படுவதை நாம் அங்கீகரிக்கிறோம் என்பதை பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். ஒருவரையொருவர் கனம்பண்ணுவதில் உறுதியாக இருக்கிறோம். நம்முடைய வேறுபாடுகளின் மூலம் சாத்தானை நம்மைப் பிரிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, ஆண்களையும் பெண்களையும் கனம் பண்ணி , அவருடைய ஊழியத்தில் அவர்களைப் பயன்படுத்திய நம் இரட்சகரைச் சார்ந்து ஒன்றுபடுவதைத் தேர்ந்தெடுப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , யாருடைய சாயலில் நான் படைக்கப்பட்டேனோ, நீர் எங்களை மதிப்பதுப் போல மற்ற அனைவரையும் மதிக்கவும் கனம்பண்ணவும் எனக்கு தைரியத்தை தாரும். நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் உம் சாயலில் உருவானவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அன்புள்ள பிதாவே , தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இன, சமூக அல்லது பாலின வேறுபாடுகள் என் வாழ்க்கையில் நீர் கொண்டு வரும் மக்களின் மீது தலையிடுவதை நான் விரும்பவில்லை. என் இரட்சகரைப் போல மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் கனம் பண்ணவும் இயேசுவின் கண்கள், இருதயம் மற்றும் வார்த்தைகளை எனக்குத் தாரும் , என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து