இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
புத்திசாலிகள் மற்றவர்களை அவமரியாதை செய்வதன் மூலமும், அவர்களை இழிவுபடுத்துவதன் மூலமும் தங்கள் ஞானத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, தேவனுக்கு பயந்த மற்றும் ஞானமுள்ள மக்கள் தங்கள் நாக்கைப் அடக்கி , நல்ல, மரியாதைக்குரிய, நீதியான, அன்பான மற்றும் உண்மையானதைப் பேச தங்கள் நாவை அனுமதிக்கிறார்கள். நம் உலகம் இழிவான மற்றும் ஏலனம் நிறைந்துள்ளது. நாடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி இழிவுபடுத்தும் மற்றும் ஆரோக்கியமற்ற கேலிப் பேச்சுக்களுடன் விரைவாகச் செயல்படும் நபர்களுக்கு நமது கலாச்சாரம் அதிக மரியாதை அளிக்கிறது. தேவனின் மக்களாகவும், இயேசுவைப் பின்பற்றுபவர்களாகவும், நாம் சொல்வதன் மூலம் மற்றவர்களை மீட்கவும், நம் வார்த்தைகளால் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரவும் அழைக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 4:29).
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள பிதாவே , உமது ஞானத்தையும், பொறுமையையும், இரக்கத்தையும் நான் கேட்கிறேன், அதனால் நான் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்மை மகிமைப்படுத்துவதற்க்கு எனது பேச்சைப் பயன்படுத்த முடியும். தயவு செய்து, தகப்பனே, மற்றவர்களை புண்படுத்தவும், இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் என் வார்த்தைகளைப் பயன்படுத்த நான் ஆசைப்படும்போது, பரிசுத்த ஆவியை கொண்டு என் இருதயத்தில் புதிய வழியின் தாரும். நான் அந்த விஷயங்களைச் செய்ய விரும்பவில்லை, எனவே நான் பரிசுத்த ஆவியின் உதவியைக் கேட்கிறேன். நான் மற்றவர்களுடன் பேசும்போது அதிக கிருபையாகவும் அன்பாகவும் இருக்க உம் ஓத்தாசையை கேட்கிறேன், இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.