இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர் அவருடைய வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார், மிகவும் தனிமையாக உணர்கிறார் மற்றும் ஒரு பயங்கரமான சிறையில் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார். அவர் வழிகாட்டிய பல வாலிபர்கள் விசுவாசத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது அவருக்கு எதிராகத் திரும்பினர். இப்படிப்பட்ட சூழலில் பவுலால் எப்படி நன்றி சொல்ல முடியும்? அவர் இயேசுவோட கூட அவருடைய வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கை மீதான நம்பிக்கை (2 தீமோத்தேயு 4:6-8) மற்றும் தனது விசுவாசத்தின் கூட்டாளியாகிய அன்பு குமாரன் தீமோத்தேயுவின் உடனான நம்பிக்கை மற்றும் உறவைப் குறித்து பேசுகிறார் . இதில் சிறப்பான காரியம் என்னவென்றால், அவர் தீமோத்தேயுவுக்கு மாத்திரம் நன்றி சொல்லாமல், தீமோத்தேயுவுக்காக தேவனு க்கு தனது நன்றியையும் செலுத்துகிறார். ஜெபத்திலே மாத்திரம் தேவனுக்கு நன்றி செலுத்துவதில் அவருக்கு திருப்தி இல்லை. தீமோத்தேயுவு தனது வாழ்க்கையின் முடிவை எதிர்கொள்ளும் போது, ​​அவர் தனக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் ஒருவருக்காக தேவனுக்கு எப்பொழுது கடைசியாக நன்றி தெரிவிக்கும் குறிப்பை அனுப்பி, அதை அந்த குறிப்பிட்ட நபரோடு பகிர்ந்துகொண்டீர்கள்? உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் அல்லது அவசியமாவர்களுக்கு அளிக்க வேண்டிய .ஆசீர்வாதத்தை காலம் தாழ்த்தாதீர்கள் . இயேசுவுடனே தங்கள் ஜீவியத்தில் இந்த ஆசீர்வாதம் அவர்களுக்கு அவசரமாக தேவைப்படலாம்.

என்னுடைய ஜெபம்

எல்லா கிருபைகளையும் உடைய பிதாவே , உமக்கு நன்றி! கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் நான் பெற்ற ஒவ்வொரு சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. என் ஆவிக்குரிய விசுவாச ஜீவியத்தில் எனக்கு அத்தகைய ஆசீர்வாதமாக இருக்கும் சிறப்பு நபர்களுக்காக இன்று நன்றி... (ஒரு நிமிடம் எடுத்து பிதாவாகிய தேவனுக்கு முன்பாக அவர்களின் பெயர்களை. குறிப்பிட்டு சொல்லுங்கள்). இந்த விலையேறப்பெற்ற நபர்களுக்கு எனது பாராட்டுக்களையும் மற்றும் அங்கீகாரத்தைக் காண்பிப்பதிலே எனக்கு வளர உதவுங்கள், இதன் மூலம் அவர்கள் எனக்கு எப்படிப்பட்ட ஒரு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். இயேசுவின் நாமத்தினாலே , உமக்கு என் நன்றிகளை கூறுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து