இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனின் மாபெரும் வெற்றியை நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதற்காகக் காத்திருக்கும் அதே வேளையில், நாம் மிகவும் உக்கிரமான போராட்டத்தில் இருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நமது மிகக் கொடூரமான போராட்டங்கள் மாம்சம் மற்றும் இரத்தத்தினால் உண்டான மக்களுடன் அல்ல, ஆனால் பொல்லாத ஆவியின் வல்லமையுடன்,அவனுடைய பொல்லாத இடங்களிலும் நமக்கு போராட்டம் உண்டு (எபேசியர் 6:10-12). இந்த பொல்லாத சக்திகள் பெரும்பாலும் "பொய் அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள்" மற்றும் "தெய்வ பக்தியின் வேஷம் தரித்தவர்கள் " இப்படிப்பட்ட மக்களை இயேசுவின் ஊழியர்களாக இவ்வுலத்திலே சாத்தானால் அழைக்கப்படுகின்றனர் (2 கொரிந்தியர் 11:13). அவர் திரும்பி வரும்போது இயேசு கிறிஸ்துவின் மூலம் பொய்யான அனைவருடனும் இந்த போராட்டத்தில் ஆண்டவர் வெற்றி பெறுவார். முடிவு நிச்சயம். இயேசு அந்தப் போராட்டத்தை சிலுவையில் வெற்றி சிறந்தார் (கொலோசெயர் 2:15), அவர் திரும்பி வந்து தனது எதிரிகள் ஒவ்வொருவரும் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சி செய்வார் (1 கொரிந்தியர் 15:24-25). கிறிஸ்து ஏற்கனவே வென்றார், இருப்பினும், நாம் ஏமாற வேண்டாம்; எல்லா மக்களையும் ஏமாற்றவும், தவறான போதகர்களைப் பயன்படுத்தவும், இழந்தவர்களைக் குழப்பவும் சாத்தான் முடிந்த அனைத்தையும் செய்வான். தேவனின் திட்டத்துடன் ஒட்டிக்கொள்வோம் - அவருடைய சத்தியத்தில் வாழ்வோம், வேதத்தில் அவருடைய குரலைக் கேட்போம், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவோம் (1 யோவான் 2:20-27).
என்னுடைய ஜெபம்
பரிசுத்த தேவனே , தயவு செய்து சத்தியத்தை பகுத்தறிந்து, சாத்தானின் வஞ்சகத்தையும், அவன் நமக்கு பொய்யான விஷயங்களைக் கொண்டு கற்பிக்கும் காரியத்தையும் , நம்மை வழிதவறச் செய்வதற்கும் அவன் பயன்படுத்தும் வஞ்சகத்தையும் எதிர்க்கும் வல்லமையை எனக்குத் தாரும் . தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினால் எனக்கு அதிகாரம் அளித்து, நான் உமக்காக வெற்றியுடன் வாழ முற்படுகையில், எது உண்மை, சரியானது, பரிசுத்தமானது என்று பகுத்தறிய உமது ஞானத்தைக் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே, ஜெபிக்கிறேன் . ஆமென்.