இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
யோசுவா எனக்கு பிடித்த வேதாகம நாயகர்களில் ஒருவர். அவர் மோசேக்கு ஒரு பெரிய பிரதான ஊழியக்காரன். அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுற்றிப் பார்த்தபோது தனது சகாக்களால் அல்லது கூட்டத்தின் கருத்துக்களினால் வழிநடத்தப்பட மறுத்துவிட்டார். அவர் ஒரு சிறந்த தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார் மற்றும் ஒரு சிறந்த தலைவராக இருந்தார் - அது எளிதான காரியம் அல்ல! யோசுவா தனது முதுமையிலும் துடிப்பாகவும், உயிர்ப்புடனும் இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, யோசுவா தேவனுக்கு கீழ்ப்படிந்து, தேவன் தனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தார், அதே போல் மோசேக்கு தேவன் கட்டளையிட்டதையும் செய்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோசுவா எங்கும் எப்பொழுதும் உண்மையுள்ளவராகவே இருந்தார்!
என்னுடைய ஜெபம்
ஆண்டவரே, என் அப்பா பிதாவே , நான் மரித்தபின்பும் , மக்கள் என் வாழ்க்கையின் கதையைச் சொல்லும்போது, நீங்கள் என்னிடம் கேட்ட எல்லாவற்றிலும் நான் உண்மையுள்ளவனாகக் கருதப்படுவேன். பிளவுபடாத இருதயத்துடனும், உம் இரக்கமுள்ள கிருபைக்காக உமக்கு தகுதியான மகிமையையும் புகழ்ச்சியையும் உண்டுபண்ணும் வாழ்வுடனும் உமக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன். மேலும் என் முன்னோர்களின் விசுவாசம் எனது இளமைப் பருவத்தில் உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதைப் போலவே எனது கடைசி காலத்திலும் உண்மையாக இருக்க விரும்புகிறேன்! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.