இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த வசனம் எனக்கு கடினமாக உள்ளது, ஏனென்றால் நான் மிகவும் பாக்கியவான் என்பதை நான் அறிவேன். இக்கட்டும், உபத்திரவமும் இப்போது என் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாகத் தெரியவில்லை. ஆனால் உலகில் பல இடங்களில் இந்த அறிக்கையானது, தாக்குதலுக்கு உள்ளான மற்றும் துன்புறுத்தல் மற்றும் மரண அச்சுறுத்தலின் கீழ் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கு மெய்யான வார்த்தையாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் சாத்தானின் அச்சுறுத்தல்களை விட தேவன் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பும் மற்றும் அவருக்கு கீழ்ப்படிதலுக்கான அவர்களின் அர்ப்பணிப்பும் பெரியது, ஏனென்றால் தேவனுடைய சித்தமே அவர்களின் மகிழ்ச்சியாகும்.
என்னுடைய ஜெபம்
மகத்துவமும் பரிசுத்தமுள்ள தேவனே , உபத்திரவத்தின் கீழ் இருக்கும் உம் திருச்சபையை விடுவிக்கும்படி இப்பொழுது கேட்டுக்கொள்கிறேன். ஆனால் பிதாவே , சரீரபிரகாரமாக விடுதலை என்பது எப்பொழுதும் வரப்போவதில்லை , வாழ்க்கையில் சமரசத்திற்கு சரணடைவதற்கு முன், மரணத்திலும் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும் என்று நானும் என் சகோதர சகோதரிகளுக்காகவும், எனக்காகவும் விண்ணப்பம் செய்கிறேன். தயவு செய்து எங்கள் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள்: நாங்கள் நம்புகிறோம் ஆனாலும் எங்கள் அவநம்பிக்கையிலே உதவியருளும் . கீழ்ப்படிந்திருக்க உமது ஆவியின் மூலம் எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள்: நாங்கள் விழுந்துபோன வேளைகளில் எங்களை மன்னித்தருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, உம்முடைய மகிமையான சமூகத்திலே எந்த ஒரு பிழையில்லாமல் எங்களை சேர்த்தருளும் . என் இரட்சிப்பையும் உறுதியையும் நான் காணும் இயேசுவின் நாமத்தினாலே இதை ஜெபிக்கிறேன். ஆமென்.