இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவினுடைய அன்பான நண்பரே, தேவனானவர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அவர்கள்(நம்மை சுற்றியுள்ளவர்கள்) இன்னும் அப்படியாக வாழ தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை ஆகையால் நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களுடன் பொறுமையாக இருங்கள் - ஏனென்றால் இன்னும் நீங்களும் எல்லாவற்றிலும் தேவன் விரும்பியவண்ணமாக முழுமையாக ஜீவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் "தோல்விகளை" நீங்கள் "சகித்துக் கொள்ளும்போது", மற்றவர்களும் உங்கள் தோல்விகளில் பொறுமையாக இருப்பதையும், நீங்கள் எண்ணி பார்ப்பதை விட உங்களின் உண்மைத்தன்மைக்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருப்பதையும் காண்பீர்கள் . நிச்சயமாக, பொறுமையாக இருப்பதன் குறிக்கோள் நமக்கே நன்மை செய்வதல்ல. மாறாக, கிறிஸ்துவுக்குள் உள்ள மற்ற நமது சகோதர சகோதரிகளில் பலர் தங்கள் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பு ஆகிய காரியங்களில் மிக மெல்லிய இழைகளால் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காக இதைச் செய்கிறோம். அவர்களை ஒருபோதும் விட்டுவிடாமலும் , இடறிவிழ செய்யாமலும் இருப்போம்!
என்னுடைய ஜெபம்
இரக்கமுள்ள நல்மேய்ப்பரே,வாழ்க்கையின் போராட்டத்திலே சிக்கியிருப்பவருக்கும் மற்றும் உம்முடைய பெலனும் இன்னுமாய் என்னுடைய ஊக்கமும் தேவைப்படும் நபரிடம் இன்னும் பொறுமையாய் இருக்க உதவிச் செய்யும். நீர் பார்க்கும் விதத்தில் அவர்களின் போராட்டங்களை கவனிக்காததற்கு அடியேனை மன்னித்தருளும் . உம் பரிசுத்தத்தில் அவர்களைப் பூரணப்படுத்த நீர் எவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்க எனக்கு உதவுங்கள். ஆண்டவரே, என் சகோதர சகோதரிகளை கிருபையுடன் ஆசீர்வதிக்க நான் முயலும்போது இந்த காரியங்களை குறித்து என் இருதயத்திலே நீர் பேசியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.