இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எபிரேயர் 11:1-40 ஆம் அதிகாரத்திலே, முன் காலத்திலே வாழ்ந்த விசுவாச வீரர்களை நினைவூட்டல்களால் நிறைந்துள்ளது. அவர்களில் அநேகர் எல்லாவற்றையும் பணயம் வைத்தனர். மற்றவர்கள் தங்கள் விசுவாசத்தை அவித்துப்போடுவதற்கு பதிலாக தங்கள் மேலான ஜீவனையே கொடுக்க ஆயத்தமாயினர் . இப்படிப்பட்ட நெருக்கடி மற்றும் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அவர்கள் எப்படி ஒரு வலுவான விசுவாசத்துடன் வாழ்ந்தார்கள்? அவர்கள் ஒரு மேலான இடத்தையும் , ஒரு சிறந்த வீடு , ஒரு சிறந்த தேசத்தையும் , ஒரு சிறந்த நகரம் - அந்த ஒரு பரலோகத்தை தேடிக்கொண்டிருந்தனர். தேவன் அவர்களுக்கு இந்த சிறந்த இடத்தை ஆயத்தம் செய்தார். அவர் அவர்களின் தேவன் என்று அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்கிறார், மேலும் அந்த சிறந்த இடத்திற்கு அவர்களை வரவேற்பதாக உறுதியளித்தார், மேலும் அவருடன் அவர்களின் வீடாக இருக்கும் ஒரு நிலையான நகரம். மேலும் இந்த சிறந்த இடம் இன்று விசுவாசமுள்ள மக்களாகிய நமக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது! நம்முடைய பரலோக வீட்டிற்கு அழைத்து செல்ல தயாராகி வருவதாக இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார், மேலும் அவர் திரும்பி வந்து அவர் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வார் (யோவான் 14:1-4). இந்த மகிமையான இடத்தில் நாம் அவருடன் சேர வேண்டும் என்று பரலோகத்தின் தகப்பன் ஏங்கினால், நிச்சயமாக அவருடன் இருக்கவும், அந்த உலகத்திலே அவருக்காக வாழவும் நாம் ஆழ்ந்த ஏக்கத்துடன் இருக்க முடியும். நம்முடைய பரலோக தேசத்தை விரும்பி, அவர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள இடத்தில் நம் பிதாவைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்போம்!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , என்னைக் இரட்சிக்க நீர் செய்த அனைத்திற்காகவும் நன்றி. என்னைப் குறித்து வெட்கப்படாமல் இருப்பதற்காகவும் நன்றி. நான் உம்முடன் நித்திய வீட்டிற்கு பெறுவதற்கு தயார் செய்ததற்காக நன்றி. உமது கிருபையில் நம்பிக்கையுடனும், இயேசுவின் பலியினால் மன்னிக்கப்பட்டதாகவும், உமது பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக இருக்க எனக்கு அதிகாரம் கிடைத்ததாலும், நான் ஜெயமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே இந்த ஜெபத்தை உம்முடைய சமூகத்திலே கொண்டுவருகிறேன். ஆமென்.