இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கெட்ட செய்திகளைக் கேட்பதை நாம் விரும்பாவிட்டாலும், மற்றவர்கள் மீதான தீர்ப்பை நாம் பாராட்டாமல் இருக்கலாம் என்றாலும், அது பொருத்தமானதாக இருக்கும் நேரம் இருக்கிறது. இயேசுவானவர் நமக்காக பலியாக கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டி மாத்திரமல்ல , மேய்ப்பனாகிய தாவீது சங்கீதம் 23:1-6 இல் கூறுவதுப்போல போல, அவர் பூமியில் நம்முடன் தேவனை வெளிப்படுத்தி ஊழியம் செய்தவர் (மத்தேயு 1:23). கர்த்தருடைய ஆடுகளின் பூமிக்குரிய மேய்ப்பர்கள் அன்பாகவும் உண்மையாகவும் வழிநடத்தாதபோது, கர்த்தர் கடுமையான நீதியைக் கொண்டுவருவார் . சகரியாவின் செய்தி, வழிநடத்தும் அனைவருக்கும் ஒரு வலுவான நினைப்பூட்டல், அவர்கள் அதை நேர்மையாகவும் மென்மையாகவும் செய்ய வேண்டும். தேவபக்தியற்ற தலைவர்கள் யாரை துஷ்பிரயோகம் செய்தார்களோ, பரலோகத்திலுள்ள அவர்களுடைய தகப்பன் அந்த தேவபக்தியற்ற தலைவர்களை தகுந்த முறையில் தண்டிப்பார் என்பதை அறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவனின் ஆடுகளின் பொறுப்பை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் அவர்களின் மந்தையை மேய்க்கும் அழைப்பை அவமதித்தவர்கள் மீது தேவன் நீதியுள்ள நீதியைக் கொண்டுவருவார். நமது உலகத்துக்குரிய மேய்ப்பர்கள் நம் கண்ணீரைத் துடைக்காவிட்டாலும், நமது பரலோகத்தின் மேய்ப்பன் நம் கண்ணீரைத் துடைப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம் (வெளிப்படுத்துதல் 7:15).
என்னுடைய ஜெபம்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:1-6) இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம் . ஆமென்.