இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன மற்றும் கலாச்சார தடைகளை உடைப்பது என்பது ஒருபோதும் எளிதான காரியமல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் பேதுருவை கொர்நெலியு மற்றும் அவரது குடும்பத்தினருடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வழிநடத்தியபோது, ​​​​ஆரம்பகால சபையின் ஊழியர்கள் எதிர்கொண்ட ஓர் சவாலான காரியமாய் இது இருந்தது, மேலும் அவர்கள் இயேசுவின் சீஷர்களானார்கள். யூத சீஷர்கள் புறஜாதிகள் இயேசுவின் சபைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாக , தேவனின் ஆவி அவர்களின் தவறான எண்ணங்களில் நிலைநிற்க அனுமதிக்கவில்லை. மாறாக, இன வெறுப்பு மற்றும் கலாச்சார அறியாமையை தகர்க்க பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இருந்த சவாலை மேற்கொள்ள , அதை நடப்பிக்க பெலன் தந்தது வழிநடத்தினார் . இன்று நாமும் அப்படித்தான் இருக்கவேண்டும். இயேசுவுக்குள் வழிநடத்தப்படும் ஒவ்வொரு மக்களையும் , இனம், மொழி மற்றும் வேறு காரியங்களும் பாகுபாடு இன்றி எல்லா தடையையும் தகர்த்து, தேவனை மகிழ்ந்து துதிக்கும் இயேசுவின் மக்களாக நாம் இருப்போம். நற்செய்தியின் வெற்றிகரமான வாக்குறுதி நிறைவேறும் வரை தொடர்ந்து செல்வோம்: "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். " (கலாத்தியர் 3:28). இதைச் செய்வதன் மூலம், ஒவ்வொரு மொழி, இனம் , மக்கள் மற்றும் தேசத்தைச் சேர்ந்த மக்களுடன் தேவனைத் துதிப்பதால், பரலோகத்தின் நம்பமுடியாத துதித்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் (வெளிப்படுத்துதல் 7:9-11). கிருபை , அன்பு மற்றும் ஜீவன் கொண்ட தனது குடும்பத்திற்கு பூமியின் அனைத்து மக்களையும் அழைக்க தேவன் ஏங்குகிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , உம்மை அறியாதவர்களுடன் இயேசுவின் கிருபையைப் பகிர்ந்து கொள்ளும் போது கலாச்சார, மொழி மற்றும் தேசிய தடைகளைக் கடக்க முயற்சிக்கும் அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் உமக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள் மற்றும் உம்மைச் சுற்றியுள்ள மகிமையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய அவர்களுக்கு உதவுங்கள்! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து