இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய மக்களுக்காக மோசேக்கு கொடுக்கப்பட்ட தேவனின் கட்டளைகளைப் பற்றிய மூன்று முக்கியமான செய்திகளை மோசே நமக்கு இங்கே கூறுகிறார் . 1.பெற்றோர்களாகிய நாம் , தேவனுடைய கட்டளைகளை நம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது நமது பொறுப்பு - அரசாங்கம், பள்ளிகள் அல்லது சபையின் பொறுப்பு அல்ல. ஆனால் அவை நம்முடைய நற்பண்புகளை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எல்லாவற்றிக்கும் மேலாக பெற்றோராகிய இது நம்முடைய மிக முக்கியமான பொறுப்பாகும் ! 2.ஒரு குடும்பமாக நம் அனுதின வாழ்க்கையின் காரியங்களில் தேவனின் கட்டளைகளை கற்பிக்க வேண்டும். இந்த துப்புரவான கற்பித்தல் முறை நமது அன்றாட வாழ்க்கை முறையில் கட்டமைக்கப்பட வேண்டும் மற்றும் தேவனின் கட்டளைகளை தங்கள் வாழ்க்கையின் பாதையில் நடைமுறைப்படுத்த நம் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். 3.தேவனுக்கும் அவருடைய பரிசுத்த காரியங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நம் பிள்ளைகளை வளர்க்கும் முயற்சியில் நமது வார்த்தைகள் மற்றும் கிரியையின் முன்மாதிரி இரண்டின் மூலமாகவும் அவர்களுக்கு தொடர்ந்து கற்பிக்க வேண்டும். இப்போது நாம் தேவனின் கட்டளைகளை நம் பிள்ளைகளுக்கு ஒரு கடினமான வேலையாக, ஒரு சுமையாக, ஒரு பெரிய பொறுப்பாகக் கற்பிப்பதைக் காணலாம் அல்லது தேவனுடைய மக்களாக அவர்களுடைய எதிர்காலத்திற்கான வாழ்க்கையை வடிவமைக்கும் வாய்ப்பாகவும், ஒரு பிள்ளையாக ஒரு நபராக வளர்ப்பதில் தேவனுடன் பங்குதாரராகவும் நாம் பார்க்கலாம், இன்னுமாய் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்காக நித்திய மாற்றத்தை உண்டுப்பண்ணும் மக்களாக அவர்களை வளர்க்கலாம் . அத்தகைய பரிசுத்தமான , நித்திய மற்றும் செல்வாக்குமிக்க கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி!

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே , இப்பொழுதும் நான் மற்றவர்களுக்கும் , குறிப்பாக என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என் நம்பிக்கையை பகிர முயலும்போது, ​​தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள். அவர்களுக்கு நிலையான மற்றும் உண்மையுள்ள சாட்சியாக இருக்க என்னை ஆசீர்வதியும். தயவு செய்து பரிசுத்த ஆவியானவர் அடியேன் பேசும்படியான சரியான வார்த்தைகளையும், அவற்றைச் சொல்ல வேண்டிய சரியான நேரம் எப்போது என்பதை அறிவதற்கான ஞானத்தையும் எனக்கு தர வேண்டுமென்று கேட்கிறேன் . ஒரு வலுவான கிறிஸ்தவ முன்மாதிரியை விட்டுச்செல்லும் தைரியத்துடன் உம் சத்தியத்தை அன்புடனும் பகிர்ந்து கொள்ள எனக்கு பெலனையும் உணர்திறனையும் தாரும் . நான் செல்வாக்கு செலுத்துபவர்கள் உமக்காக என் வாழ்க்கையை வாழ்வதில் மகிழ்ச்சியைக் காணட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து