இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உத்தம மார்க்கத்தாரா ? நம்முடைய சொந்த சாதனைகளில் நாம் உத்தம மார்க்கத்தார் என்று கூற முடியாது, அப்படியானால் கர்த்தர் என்னில் எப்படி பிரியமாயிருப்பார் ? இயேசுவின் சிறந்த பலியின் காரணமாக நாம் பிரியமானவர்களாயிருக்கிறோம் . தேவன் நம்மை மன்னித்து சுத்திகரித்திருக்கிறார், மேலும் நாம் கிறிஸ்துவைப் போல குற்றமற்றவர்களாகவும், அவரைப்போல பூரண புருஷராய் இருக்க பரிசுத்த ஆவியானவர் நித்தமும் கிரியை செய்கிறார் (2 கொரிந்தியர் 3:18). பவுல் தீமோத்தேயுவிடம் தான் பாவிகளில் பிரதான பாவி என்று தன்னை குறித்து சாட்சி கூறினார் (1 தீமோத்தேயு 1:12-17), ஆனாலும் இயேசு மீண்டும் வரும்போது நீதியின் மகிமையான கிரீடத்தை அணிந்துகொள்வார் என்று பவுல் உறுதியாக இருந்தார் (2 தீமோத்தேயு 4:6-8). அவருடைய உறுதியானது இயேசுவிலுள்ள தேவனின் கிருபையின் காரணமாக இருந்தது (1 தீமோத்தேயு 1:15-17). உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நம் பிள்ளைகள் முழு முதிர்ச்சியடையாதவர்களாகவோ அல்லது அவர்களின் நடத்தையில் சரியானவர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வது போல நாமும் கர்த்தருக்கு பிரியமாய் இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்வதினால் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசுவின் பலியின் காரணமாக நாம் குற்றமற்ற தன்மையை நாடுகிறோம். அதே பலியின் காரணமாக தேவன் நம்மை குற்றமற்றவர்களாகக் கருதுகிறார். அதாவது பரலோகத்திலுள்ள நம் பிதா நம்மில் பிரியமாயிருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, என் தேவனே , என் வார்த்தைகளும் என் செயல்களும் உமக்கு மகிழ்ச்சியை கொண்டுவரட்டும் ! நீர் எனக்காக அநேக காரியங்களை செய்திருக்கிறீர்கள், நான் என் சொந்த முயற்சியால் செய்ய முடியாததைச் உமது கிருபையினால் அடியேன் பெற்றிருக்கிறேன் , இன்னுமாய் அடியேன் குற்றமில்லாமல் வாழ முற்படும்போது உமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தர விரும்புகிறேன்! இயேசுவின் நாமத்தினாலே , உமக்கு நன்றிகளையும், துதியும் செலுத்தி ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து