இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அப்போஸ்தலனாகிய பவுல் ஆச்சரியத்துடன் இருந்தார். அவர் மிகவும் பிரச்சனைக்குரிய சபை ஒன்றுக்கு எழுதுகிறார், ஆகிலும் அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான காரணங்களைக் அவர் கண்டுபிடித்தார். முதலாவதாக, அவர் அவர்களுக்காக நன்றியுள்ளவராக இருக்கிறார், ஏனென்றால் இயேசு அவர்களுக்காக மரித்தார். தேவன் தம்முடைய கிருபையை மற்றவர்களுக்கு அளிக்கும்போது, ​​நாமும் அதையே செய்யாமல் இருப்பது எப்படி? இரண்டாவதாக, அவர்கள் தூஷிக்கிறதான பகுதிகளையும் கண்டறிந்து அவைகளும் நன்றி சொல்ல அவைகளை காரணமாக எண்ணினார் - அவர்கள் அதை சிதைத்திருக்கலாம், ஆனால் தேவனை கனம் பண்ணும் வகையில் ஆட்சி செய்யும் போது, ​​இந்த ஈவுகளினால் அவர்களின் சபையை ஆசீர்வதிக்க முடியும். அவருடைய வார்த்தை பின்பற்றுவதற்கு கடினமான இருந்தாலும், அந்த பிள்ளைகளுக்கு உபத்திரவம் இருந்தாலும், தேவனுடைய பிள்ளையாக இருப்பதை நாம் போற்றப்பட வேண்டிய ஒன்று அதை எண்ணி மேன்மை பாராட்ட வேண்டிய ஒன்று என்பதை பவுலானவரின் உதாரணம் நமக்கு நினைப்பூட்டுகிறது.

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , உமது பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி செலுத்துவதற்கான இருதயத்தை எனக்குக் கொடுத்தருளும். மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள், என்னுடைய வேதாகம கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அல்லது அவர்கள் எனக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் மற்றவர்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் எளிதானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னை மன்னித்தருளும் , நீர் என்னை மன்னியாதிருந்தால் , நான் உம் பிள்ளைகளில் ஒருவராக இருந்திருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும். தயவுசெய்து உம்முடைய பிள்ளைகளை எண்ணி மகிழ்ச்சியடைய எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து