இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் மிகவும் நேசிப்பவரின் கல்லறைப் பக்கத்தில் எப்போதாவது நின்றிக்கும் தருவாயில் , இதே எண்ணம் உங்கள் மனதைக் கடந்திருக்கலாம் - "நீர் இங்கேயிருந்தீரானால், ஆண்டவரே..."! நாம் காயப்படுத்தும்போது இயேசு எங்கே இருந்தார் ? அவரால் ஏன் எங்களுக்கு உதவ இங்கே இருக்க முடியவில்லை? இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான பதில்கள் உள்ளன. 1.நம்முடைய இழப்பு மற்றும் துயரத்தின் தருணங்களில் இயேசு நம்முடன் இருக்கிறார். திருச்சபை என்பது இயேசுவின் சரீரமாகும், ஒவ்வொரு இரக்கமும் , தயவுள்ள வார்த்தையும் , நம்மை ஆறுதல்படுத்தும் முயற்சியாகும் , எளிய உதவிச் செயல்களும் நமது துக்கத்தைப் போக்க இயேசுவானவர் கிரியை செய்யும் ஒரு பகுதியாகும். 2.நம்முடைய அன்புக்குரியவரை இந்த வாழ்க்கையிலிருந்து மரித்து அடுத்த வாழ்க்கைக்குச் செல்வதை இயேசு தடுத்து நிறுத்தவில்லை என்றாலும், சரீர ரீதியாக மரித்த ஒவ்வொரு கிறிஸ்தவருக்கு அவர் நிலையான மற்றும் அழிந்து போகாத ஸ்தலத்தை தருவேன் என்று சொன்னவர், வாக்கு மாறாதவர் . ஒரு கிறிஸ்தவர் மரிக்கும் போது, ​​அவர் கிறிஸ்துவுடனே அவருடைய சமூகத்திலே இருப்பார் (2 கொரிந்தியர் 5:6-7; பிலிப்பியர் 1:21-23) மற்றும் தேவனின் அன்பான பிரசன்னம் அவனுக்கோ அவளுக்கோ ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை (ரோமர் 8:35 - 39) மார்த்தாள் தனக்குள் ஏதோ ஆழமான நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது, அது இந்த வாக்குறுதிகளுடன் எதிரொலித்தது, ஏனென்றால் அவளுடைய சகோதரன் லாசரு மரித்துவிட்டாலும் , இயேசு இன்னும் ஏதாவது செய்ய முடியும் என்று அவள் முழுநிச்சயமாய் நம்பினாள். அவள் சொல்கிறாள், "இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். " (யோவான் 11:22). மிகுந்த துக்கம் மற்றும் ஆழ்ந்த துயரத்தின் மத்தியில் , விசுவாசிகளாகிய நாம் நம்முடைய அன்பானவரின் மரணத்தைத் தடுக்க இயேசு பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்று ஏங்குகிறோம். ஆயினும்கூட, இந்த மரணத்தின் கசப்பான காரியத்தின் மத்தியில் , நம்பிக்கையுடன் சொல்லலாம், "இப்போது கூட தேவன் நம் இருதய நொறுங்கினதிலிருந்து ஜெயத்தை கொடுப்பார் "!

Thoughts on Today's Verse...

If you have ever stood at the grave side of a loved one, this thought probably crossed your mind, too — "if you had only been here, Lord..."! Where is Jesus when we hurt? Why couldn't he be here to help us? There are a couple of crucial answers to remember.

  1. Jesus is with us in our moments of loss and grief. The Church is Jesus' Body and every act of kindness, word support, effort to comfort us, and simple helping actions are part of Jesus working to alleviate our grief.
  2. While Jesus may not have kept our loved one from passing from this life to the next, he has been the abiding and unbroken presence for each Christian who has died physically. Paul reminds us that when a Christian dies, he or she goes to be with Christ (2 Corinthians 5:6-7; Philippians 1:21-23) and God's loving presence is never lost to him or her (Romans 8:35-39).

Martha seems to have something deep inside her that resonated with these promises because she was convinced that even though her brother, Lazarus, had died, she trusted that Jesus could still do something. She says, "But I know that even now God will give you whatever you ask" (John 11:20). In the face of overwhelming grief and deep sorrow, we as believers can yearn to have had Jesus present to prevent the death of a loved one. Yet in the face of this unwanted intrusion of death, we can say with faith, "Even now God will" provide victory out of our heartbreak!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, என்னுடைய இழப்பு மற்றும் துக்க காலங்களில் என்னுடன் இயேசுவின் மாறாத பிரசன்னத்தைக் காண தயவுசெய்து எனக்கு உதவுங்கள். என்னில் நிலைத்திருக்கும் பரிசுத்த ஆவியின் ஆறுதலான பிரசன்னத்தில் அவரைக் காண எனக்கு உதவிச்செய்யும் . உம்முடைய சரீரமாகிய சபையில் உள்ள மக்கள் உதவும்போது, அன்பு மற்றும் கிருபையின் செயல்களினால் அவரைப் காண எனக்கு உதவியருளும் . கூடுதலாக, அன்பான பிதாவே , துக்கத்தை அனுபவிக்கும் வேறொருவருக்கு இயேசுவின் பிரசன்னமாக நான் பணியாற்றுவதற்கான வழிகளைப் காண என் மன கண்களை திறந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy Father, please help me see Jesus' ministering presence with me in my times of loss and grief. Help me see him in the comforting presence of the Holy Spirit who abides in me. Help me see him in the acts of love and kindness your bodily presence, the church, as your people help me. In addition, dear Father, please help me see ways that I can serve as Jesus' presence to someone else who is experiencing grief. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யோவான்-John  11:21

கருத்து