இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு நன்நாளின் ரகசியம் என்ன? நாம் விழித்தெழுந்து, முந்தையதை கழித்துப்போட்டது போலவே ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறோம் என்பதை உணர்ந்து கொள்வது எப்படி - நாம் தேவனின் மாறாத அன்பின் கிருபையின் கீழாய் இருக்கிறோம். அது நம் இருதயங்களை அன்பினால் நிறைந்து , மேலும் நாம் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் பாட வேண்டும். இந்தப் பாடல் நமக்குள் தேவனின் ஆவியைத் தட்டி எழுப்பி , நம் நாட்களை மகிழ்விக்கும் ஆழமான மற்றும் ஆழ்ந்த நன்றிக்கு நம்மை நடத்தி செல்ல வேண்டும். எனவே சோர்வாகவும், மன அமைதல் இல்லாமல் , கசப்புடன் நாளை முடிப்பதை விட , ஒவ்வொரு நாளையும் பின்வரும் விண்ணப்பதுடன் முடிப்போம், அதனால் நாம் மகிழ்ச்சியுடன் விழிப்போம்: நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். அதன்பிறகு, நம் அன்றாட வாழ்வில் தேவனுடைய கிருபையையும், நம் இருதயங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகளையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர ஆரம்பிக்கலாம். நாங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​மீதமுள்ள நாட்களில் மகிழ்ச்சியுடன் துதிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நான் நினைக்கிறேன்!

என்னுடைய ஜெபம்

மகிமை பொருந்திய எஜமானரே , நித்திய பிதாவே, உமது பரிசுத்த ஆவியின் மூலமாக உம் அன்பையும் மகிழ்ச்சியையும் என் இருதயத்தில் ஊற்றியதற்காக உமக்கு நன்றி. உமது நிலையான மற்றும் மாறாத அன்பினால் என் இருதயத்தை நிரப்பி, என் வாழ்க்கையை திருப்திப்படுத்தும் . என் அன்பான இரட்சகராகிய இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து