இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் அநேக அற்புதமான வாக்குதத்தங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார்."மரணத்தை ஜெயித்து , ஜீவனையும், நித்திய ஜீவனையும் கொண்டுவருவதற்காக" தம்முடைய குமாரனை அனுப்பியதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறார். "அவருடைய மகிமையான சரீரத்தைப் போல நம்முடைய அழிந்து போகக்கூடிய சரீரத்தையும் மாற்றுவார். நாம் "என்றென்றும் அவருடன் இருக்கும்படி அவர் நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வார், ஆனால் அந்நாள் மட்டும் , அவர் நமக்குள் வாசம்செய்து , நமக்குத் தன்னை வெளிப்படுத்துவார். அவர் நம்மை ஜெயம் பெற்றவர்களை விட மேலானவர்களாய் இருக்கச் செய்வார். மேலும்,அவரின் அன்பை விட்டு எவையும் நம்மை பிரிக்க அனுமதிக்கமாட்டார். எனவே நமது பதில் என்னவாக இருக்க வேண்டும்?ஆம், நிச்சயமாக நாம் அவரைப் துதிக்க வேண்டும். ஆனால், நாம் நமது துதிகளை வார்த்தைகளினால் மாத்திரம் சொன்னால் போதாது .நம்முடைய வாழ்க்கையும் பரிசுத்தமாக இருக்க வேண்டும், தீமையிலிருந்து , இழிவானவையிலிருந்து , அசுத்தமானவையிலிருந்து , கறைபடுதலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால் நாம் அநேக ஒழுக்கத்தின் உச்சத்தை அடைய முடியாது , ஆனால் நம் பயத்தையும், பக்தியையும் அவருக்குக் காண்பிக்க முடியும். தேவனை வாஞ்சையுடன் துதிக்க வேண்டும் , அவரைத் அப்படி துதிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, கற்புடனும், பரிசுத்தத்துடனும் அவரைத் தேடவேண்டும். இதை நாம் மறந்துவிடக் கூடாது!
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவே , என் பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள்.என் இருதயத்தைச் சுத்திகரித்து, என் பாவத்தினிமித்தம் பிசாசு என்னில் வைத்திருக்கும் எந்த தாக்கத்தையும் அப்புறப்படுத்துங்கள் . பரிசுத்தமாக இருக்க எனக்கு அதிகாரம் அளித்து, என் வாழ்க்கையை உமக்கு துதி மற்றும் நன்றியின் காணிக்கையாக ஏற்றுக்கொள்வீராக,இயேசுவின் நாமத்திலே , என் இதயத்தையும், என் வாழ்க்கையையும், அனைத்தையும் உம் சித்தத்திற்கு ஒப்பு கொடுக்கிறேன் . ஆமென்.