இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சரீரத்தில் அழகாக இருப்பதை கொண்டு பாவத்தினால் அசுத்தப்படுத்துவது என்பது அருளப்பட்ட பெரிய ஈவை வீணாக்குவதாகும். தேவனானவர் ஏன் சரீர அழகை முதலில் கொடுத்தார் என்று ஞானமில்லாத ஒருவருடன் பகிர்ந்து கொள்வது பாவமாகும் . அழகை பாவத்துக்கும் இன்னுமாய் பாவம் செய்ய விலைவிக்கும் காரியத்துக்கு உபயோகிப்பது, அதை கொடுத்தவரை இழிவுப்படுத்துவதாகும் . சரீர அழகு, விளையாட்டுத் திறமை, கூரிய புத்தி, வசீகரமான ஆளுமை அல்லது வேறு எதுவாக இருந்தாலும், நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவு எதுவாக இருந்தாலும், நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், தேவனை கனம் பண்ணவும், மற்றவர்களை நெருங்கிச் செல்லவும் இந்த ஈவுகளை தேவன் நமக்கு அளித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்மை கனப்படுத்தவும், அவர்களை இயேசுவிடம் நெருங்கி வரவும் நான் என்னுடைய ஈவுகளையும் திறமைகளையும் பயன்படுத்தாத நேரங்களுக்காக என்னை மன்னியும் . உமது மகிமைக்காக வாழவும், உமது கிருபையை கொண்டு பிறரை ஆசீர்வதிக்கவும் நான் முயல்வதால், தயவுசெய்து எனக்கு ஒரு புதிய நோக்கத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து