இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சமாதானம் - வாழ்வின் அனைத்து நலன்களையும் உள்ளடக்கிய கிருபையின் அறிந்துகொள்ள முடியாத நிலையாகும் . இயேசுவினாலே , நமக்கு மெய்யான சமாதானம் உண்டானது - ஆவி ஆத்துமா, சரீரம் ஆகிய எல்லாவற்றிலும் நமக்கு ஆரோக்கியமாய் இருப்பதாகும். மற்றவர்களுடனான அவருடனான ( இயேசு )உறவு,பாவம், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மீதான அவரது வெற்றி, நாமும் சமாதானத்தை பெறுவதை உறுதி செய்கிறது! ஆகவே, கிறிஸ்துவின் ஆவியை நாம் நம் இருதயங்களில் பெறும்போது, எவ்வளவு முழுமையான சமாதானம் இல்லாத நிலையில் இருந்தாலும், நம் சகோதர சகோதரிகளுடன் நம்மால் வாழ முடியும். தவிர, பவுல் நம்மிடையே உவமையினால் பேசுவதால் , நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக இருக்கிறோம் அதினாலே அந்த சரீரம் தன் சொந்த சரீரத்துடன் போரிட விரும்பவில்லை. எனவே யாவரோடும் சமாதானமாக வாழுங்கள், அதை ஸ்தோத்திரத்தோடே செய்யுங்கள்.
என்னுடைய ஜெபம்
எல்லா விசுவாசிகளையும் ஆசீர்வதிக்கிற பிதாவே , தயவுக்கூர்ந்து உம் சொந்த ஜனங்களை நேசிக்க எனக்கு நல் இருதயத்தை தாரும் . இயேசுவின் குணாதிசயம் என் வாழ்க்கையில் பிணைந்து இருப்பதை நான் அறிவேன், உம் ஒவ்வொரு பிள்ளைகளின் மேன்மையான தன்மையையும் நான் அதிகம் பாராட்டுவேன், மேலும் கடினமான குடும்ப உறுப்பினர்களோடு நான் பொறுமையோடு வாழ்வதினால் நீர் அடியேனை பொன்னாக விளங்கச்செய்வீர் . உம் பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பதற்கான என் இருதயம் முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை நீர் உம் கிருபையை கொண்டு என்னை தாங்கவேண்டும் என்று கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.