இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனம் பர்னபாஸைப் குறித்து பேசுகையில், பர்னபாஸ் எவ்வளவு நல்ல மனிதனாய் இருந்தான் என்பதை லூக்கா ஆசிரியர் நமக்கு நினைப்பூட்டுகிறார்! பர்னபாஸை ஏன் இவ்வளவு நல்ல மனிதராகக் கருத வேண்டும்? பல காரணங்களுக்காக. எல்லாவற்றிற்க்கும் மேலாக , பர்னபாஸ் விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிறைந்திருந்தான் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று லூக்கா ஆசிரியர் விரும்புகிறார். பர்னபாஸின் நற்குணம் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, ​​அவர் ஆவியின் கனிகளை கொடுக்க செய்து (கலாத்தியர் 5:22-23) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு நம்மை ஒத்துப்போக செய்கிறார் (2 கொரிந்தியர் 3:18). அந்தியோகியாவில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் பர்னபாஸின் செல்வாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததில் ஆச்சரியமில்லை (அப்போஸ்தலர் 13:1-3). அப்போஸ்தலனாகிய பவுலுக்கு வழிகாட்டவும், அநேக சீஷர்களைப் கிறிஸ்துவின் வழிகளில் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவும் தேவன் அவரைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. பர்னபாஸ் ஒரு நல்ல மனிதராக இருந்தார், ஏனென்றால் அவருடைய வாழ்க்கை தேவனின் ஆவியின் கீழ் இருந்தது!

Thoughts on Today's Verse...

As this scripture talks about Barnabas, Luke reminds us just how good a man Barnabas was! Why would we consider Barnabas to be such a good man? For many reasons. Primarily, Luke wants us to recognize that Barnabas was full of faith and the Holy Spirit. Barnabas' goodness shouldn't surprise us. When the Holy Spirit lives in us, he is at work producing the fruit of the Spirit (Galatians 5:22-23) and conforming us to the character of Jesus Christ our Lord (2 Corinthians 3:18). No wonder Barnabas' influence was so significant on the lives of those who lived in Antioch (Acts 13:1-3). No wonder God chose him to mentor the apostle Paul and show him how to serve in ways that multiplied disciples. Barnabas was a good man because his life was under the influence of God's Spirit!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, இயேசுவை குறித்து நற்செய்தியைப் பரப்புவதிலும், உமது ராஜ்யத்தை வளர்ப்பதிலும் என் வாழ்க்கை செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உமது குமாரனாகிய இயேசுவின் சுபாவத்திற்கு என்னை இணங்கச் செய்து, மற்றவர்களை இயேசுவிடம் நான் வழிநடத்த முற்படுகையில், உம் ஆவியின் கனியை என்னில் வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன், ஜீவனுள்ள பலியாக என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.

My Prayer...

Dear Heavenly Father, I want my life to be influential in spreading the good news of Jesus and growing your Kingdom. I offer myself to you as a living sacrifice, asking that you conform me to the nature of your Son Jesus and bring forth the fruit of your Spirit in me as I seek to influence others to Jesus. In whose name I pray, Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of அப்போஸ்தலருடைய நடபடிகள்-Acts - 11:24

கருத்து