இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கடற்கரையில் கரடுமுரடான கரையோரங்கள், விபத்துக்குள்ளாக்க கூடிய பேரலைகள் உண்டு, ஆகிலும் நான் கடற்கரையை விரும்புகிறேன். கலங்கரை விளக்கம் கடற்கரையோரத்தில் சரியாய் வடிவமைக்கப்பட்ட மற்றும் நன்கு பலப்படுத்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது . வரவிருக்கும் பலத்த புயல்காற்று பெரும் சத்தத்துடன் கரையை நோக்கி வரும்போது இருள் கூடுவதை நான் பார்க்கும் வேளைகளில் என்னால் ஏதும் செய்ய இயலாது ஆனால் என்னுடைய பரலோகப் பிதாவை நினைத்துப் பார்க்க முடியயும் . புயலின் மத்தியில் மின்னல்கள் வானத்தை கிழிப்பதை போலவும், கடுங் காற்றுடன், அலைகள் மோதியடித்த போதிலும். பெலமுள்ள கலங்கரை விளக்கமானது நம்மை வழிநடத்தும் வழிகாட்டியின் ஒளியாகவும், திசையாகவும்,நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆம், நம் ஆண்டவரும், யாவேவாகிய இஸ்ரவேலின் தேவனும் , சர்வசிருஷ்டிக்கும் எஜமானருமானவர் , என் வெளிச்சமும் என் இரட்சிப்புமாயிருக்கிறார் . என் ஜீவன் , என் நித்தியத்தின் பகுதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் எதற்கும் அஞ்சமாட்டேன் , ஏனென்றால் நான் அவர் மீது என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன் .
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள பிதாவே, அநாதியான உமது உண்மைத் தன்மைக்காக நான் உம்மைப் துதிக்கிறேன். ஒவ்வொரு தலைமுறையிலும் நீர் ஆசீர்வதித்த உம்முடைய உறுதியான அன்பு,. இருள் சூழ்ந்த காலங்களில் நம்பிக்கையையும், கொடுமையுள்ள காலங்களில் இரட்சிப்பையும், பலவீனமான காலங்களில் வலிமையையும் கொடுத்ததற்காக நான் நன்றி கூறுகிறேன். இப்போது நான் நேசிக்கும் அநேக மக்களுடன் நீர் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் போராடும் போது உம்முடைய உணரக்கூடிய பிரசன்னம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன். ஆமென்.