இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த வசனப் பகுதி பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மிகவும் சவாலான தேவ சித்தத்தை நினைவூட்டல்களில் ஒன்றாகும். நான் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்! நான் மன்னிக்க மறுக்கும் போது, நான் ` அணை கட்டுகிறேன், அதாவது தேவன் எனக்கு கொடுக்க விரும்பும் மன்னிப்பின் நீரோட்டத்தை நானே நிறுத்துகிறேன். மற்றவர்களை மன்னிப்பது கொஞ்சம் எளிதானது. இது பெரும்பாலும் மிகவும் கடினமாகவும் வலியாகவும் இருக்கும். எனினும், தேவன் அதைச் செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டார், எப்படி மன்னிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவருடைய குமாரனை நமக்குக் கொடுத்திருக்கிறார் (லூக்கா 23:34). நாம் அவரைப் போல மாறும்போது (2 கொரிந்தியர் 3:18) பரிசுத்த ஆவியின் வல்லமையால் (எபேசியர் 3:14-21) அவருடைய சித்தத்தைச் செய்ய நமக்கு அதிகாரம் அளிப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார் (2 கொரிந்தியர் 3:18). உண்மையான பிரச்சினை: என்னை காயப்படுத்தியவர்களிடம் நான் என் கசப்பை விட்டுவிடுவேனா? இன்னும் நாம் கசப்பையும் மன்னிக்க முடியாத தன்மையையும் கொண்டிருக்கும்போது, நமது கசப்புக்கும் மற்றும் வெறுப்புக்கும் நம்மை நாமே பிணையக் கைதிகளாக வைத்திருக்கிறோம். "மன்னிப்பு என்பது சிறைப்பட்ட பறவையை விடுவிக்கிறது போன்றது , பின்னர் நீங்களே அந்த சிறைபிடிக்கப்பட்ட பறவை என்பதை உணர்ந்துகொள்வது!"
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , இது ஒரு கடினமான கட்டளை என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அன்பான பிதாவே , இந்த மக்கள் எனக்கு எதிராக செய்த பாவத்தை மன்னிக்க விரும்புகிறேன் (தயவுசெய்து நீங்கள் மன்னிக்க விரும்பும் பெயர்களைச் சேர்க்கவும்). என் இருதயத்தில் இருந்து தூக்கத்தையும்,கசப்பையும் எடுத்துப்போடும் . இயேசு செய்தது போலவே அடியேனுக்கும் அந்த மன்னிக்கும் அதிகாரத்தை தாரும். தயவு செய்து உமது பரிசுத்த ஆவியை என் இருதயத்தில் ஊற்றி என்னை அன்பினாலும் மன்னிப்பினாலும் நிரப்புங்கள். கூடுதலாக, அன்பான பிதாவே , மன்னிப்பதற்கான எனது அர்ப்பணிப்பு, நான் செய்ய வேண்டிய உண்மையான வாழ்க்கை மாற்றங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை எனக்குக் கற்றுத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.