இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்முடைய ஆசீர்வாதங்களை ஆராய்ந்து அறிந்து , அவருடைய அற்புதமான கிருபைக்காக நன்றி சொல்லும்போது, தேவன் ஏன் இவ்வளவு நம்மையினால் ஆசீர்வதித்தார் என்று கேட்போம். இன்றைய வேதாகம வார்த்தையில் தேவன் தெளிவுபடுத்திய முதன்மையான ஆவிக்குரிய கொள்கையையும் ஆபிரகாமை அவர் அழைத்ததையும் நினைவிற்கொள்வோம் (ஆதியாகமம் 12:1-3). தேவன் தம் மக்களை ஆசீர்வதிக்கிறார், அதனால் அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்றும், நாம் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களாய் மாத்திரமல்லாமல், அந்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களாகவும் இருப்போம் என்பதை உறுதி செய்வோமாக ;அதினால் பரலோகத்திலுள்ள எங்கள் அற்புதமான மற்றும் உதாரத்துவமான தகப்பனுக்கு ஸ்தோத்திரங்களையும், நன்றிகளையும் அவர்களும் எங்களுடனே சேர்ந்து தெரிவிக்க முடியும்.
என்னுடைய ஜெபம்
இரக்கமுள்ள பிதாவே , அநேக நன்மையினால் அடியேனை ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி. என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு - குறிப்பாக மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அந்தப் நன்மையினை நான் எப்படிக் கொடுக்க முடியும் என்பதைப் பார்க்கும்படி தயவுக்கூர்ந்து என் கண்களைத் திறந்தருளும் . நீர் எனக்கு மிகவும் அன்பாக வழங்கிய ஆசீர்வாதங்களை நான் பகிர்ந்து கொள்ளும்போது, மற்றவர்கள் அவர்களுக்கு கிடைத்த எல்லா ஆசீர்வாதங்ககளில் இதை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாய் என்னும்படி செய்யும் - உம்முடைய அன்பான கிருபையை - இயேசுவின் நாமத்தினாலே அவர்கள் உமக்கு நன்றி செலுத்தட்டும், என்று அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.