இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேதாகமம் ஒரு அன்பின் கதை என்றால், அதின் கருப்பொருள் நம்பிக்கையாகும் . எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான பாவமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையில் நம் சொந்த ஜனத்தை இழந்திருந்தாலும், நம்முடைய பணப்பை காலியாக இருந்தாலும், எவ்வளவு அகலமான நதியாக இருந்தாலும், வேறு எந்த காரியமாக இருந்தாலும் சரி ... ஒரு பிரகாசமுள்ள நாளைய தினத்தை தமது மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்து பெற்றுக்கொள்ளும்படி தேவனானவர் அநேக காரியங்களை திரும்பத் திரும்ப அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறார் . அவரை எதிர்த்து நிற்கிற மற்றும் மறதியுள்ள தமது மக்களுக்கு நம்பிக்கை அளித்த பிறகு, தேவன் அந்த நம்பிக்கைக்கு ஒரு வாக்குறுதியைக் கொண்டு வந்தார் - அந்த எதிர்பார்த்த பிரகாசமான நாளில் - இயேசுவானவரை அனுப்பினார்!

என்னுடைய ஜெபம்

நித்திய தேவனே, உமது சத்தியத்தை அறிந்து, புரிந்துகொள்வதற்கும், உமது நம்பிக்கையில் நிலைப்பதற்கும், நான் உமது பரிசுத்த வேதத்தை தேடும்போது, ​​பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் எனக்குத் தந்தருளும். பழைய ஏற்பாட்டில் உம்முடைய ஜனத்தை மீட்டு ஆசீர்வதிக்க நீர் செய்த அநேக நம்பமுடியாத காரியங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். இயேசுவின் சீஷர்களைக் கொண்டு நீர் நடப்பித்த காரியங்களை கண்டு என்று நான் முற்றிலும் ஆச்சரியப்படுகிறேன். தயவுக்கூர்ந்து , தேவனே , என் நம்பிக்கையை உற்சாகப்படுத்தியருளும் , அதனால் நான் உம்முடைய கரங்களிலிருந்து ஒரு பெரிய விஷயத்தை கொடுப்பீர் என்று எதிர்பார்க்கிறேன், பின்னர் அதை என் வாழ்நாளில் நீர் நிறைவேற்றுவதைக் காண வாஞ்சிக்கிறேன் . இதுவும்,இன்னுமாய் என் வாழ்வில் நடந்த மற்ற எல்லா விஷயங்களும், உம்முடைய கனத்துக்கும், மகிமைக்காகவும் மாத்திரமே செய்யப்படட்டும். இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே , ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து