இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த ஜீவன் - நித்திய ஜீவனை கொடுக்கும் , இளைப்பாறுதலைக் கொடுக்கும் , குமாரனை அனுப்பிய பிதாவைவும், இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்வதால் நமக்குக் கிடைத்த ஈவாகும் (யோவான் 17:3). கர்த்தர் நமக்கு ஆரோக்கியம், மறுசீரமைப்பு, பாதுகாப்பு, நற்குணம், இப்போதும் எப்பொழுதும் தருகிற நம்முடைய மேய்ப்பராகவே இருக்கிறார் (சங்கீதம் 23:1-6). இயேசுவானவர் இம்மானுவேலராய் இவ்வுலகிற்க்கு வந்து, தேவனை வெளிப்படுத்தினார், இம்மானுவேல் என்பதற்கு , தேவன் நம்மோடு இருப்பதாகவும் நமக்கு வெளிப்படுத்தினார் (யோவான் 1:14-18; மத்தேயு 1:23). அவர் மாத்திரமே பிதாவோடு ஒன்றாயிருப்பதால் குமாரன் மாத்திரமே பிதாவை நெருக்கமாக அறிந்திருக்கிறார் (யோவான் 10:30). குற்றமற்றவர்களாகவும் பாவமில்லாதவர்களாகவும் தேவனை பிரியப்படுத்துவதற்கான நமது பாவ சுமையை இயேசு மாத்திரமே அகற்ற முடியும், ஏனென்றால் குமாரனால் மட்டுமே நம்முடைய கடந்தகால பாவங்களின் பாரத்தை நீக்கி, பரிசுத்தமாகவும், குற்றமற்றவர்களாகவும், தேவனுக்கு முன்பாக குற்றஞ்சாட்டப்படாமல் இருக்கவும் முடியும் (கொலோசெயர் 1:21- 22) மேலும், நம்முடைய நல்ல மேய்ப்பராக, இயேசு நம்மை என்றென்றும் நிலைத்திருக்கும் நித்தியமான வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்கிறார் (யோவான் 10:10-15). நாம் இயேசுவிடம் வந்து, நம் ஆத்துமாக்கள் இளைப்பாருதளுக்காக ஏங்குவதைக் காணலாம் (மத்தேயு 11:29). தேவனைப் துதிப்போம் !
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே, உமது கிருபையால் என்னை ஆசீர்வதித்து, எனக்கு வாழ்வளிக்கவும், எனக்கு இளைப்பாறுதலைத் தந்தருளும். எனது நல்ல மேய்ப்பனிடமிருந்து கொடுக்கப்படும் நல்ல ஈவுகளை நான் ஒருபோதும் வீணாய் போக்கக்கூடாது . உமது கிருபையால் என் சுமைகளை நீக்கி, இயேசுவுக்குள் என் இளைப்பாறுதலையும் மறுசீரமைப்பையும் கண்டு மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் உமக்குச் ஊழியம் செய்ய எனக்கு அதிகாரம் தாரும் . அவருடைய நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.