இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
முறுமுறுக்காமலும், தர்க்கம்பண்ணாமலும் இருங்கள் ! நாம் பொதுவாக இந்த காரியங்களை குற்றமற்ற மற்றும் கபடற்ற காரியங்களுடன் தொடர்புபடுத்துவதில்லை, இல்லையா? பவுலானவர் இந்த பிலிப்பிய மக்களுடன் அதிக நெருக்கமாக இருந்தார், மேலும் அவர் அவர்களை பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர்களின் பெலத்தை அறிந்ததினால் அந்த பெலத்தை குறித்து பாராட்டினார். அவர்களின் பெலவீனங்களையும் குறைபாடுகளையும் அவர் அறிந்திருந்தார். முறுமுறுப்பு மற்றும் , தர்க்கம்பண்ணுதலினால் அவர்கள் வாழ்க்கையில் உண்டாகும் அழிவின் தாக்கத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார் மற்றபடி அவர்கள் துடிப்பான கிறிஸ்தவ சமூகத்தினர் என்று சாட்சி கொடுத்தார் . நவீன கலாச்சாரத்தில் ஊடுருவும் எதிர்மறை மற்றும் அசுத்த ஆவியால் ஒவ்வொரு திருச்சபைகளும் கெடுக்கப்படுவதை பார்க்கும்போது, நம் நாளில் அவருடைய எச்சரிக்கைக்கு இன்றே செவிசாய்க்க வேண்டும் . விசுவாசமில்லாத மற்றும் பரிசுத்தமற்ற இருண்ட உலகிலே இரவு வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல நாமும் பிரகாசிக்க வேண்டும், அவ்வண்ணமே மற்றவர்களுக்கு இந்த வசனத்த்தை கொண்டு நினைப்பூட்டுவோம். "சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை". (யாக்கோபு -1:17)
என்னுடைய ஜெபம்
தேவனே , சில சமயங்களில் தர்க்கிக்கும் ஆவியுள்ளவனாக இருந்ததற்காக அடியேனை மன்னித்து என்னை பரிசுத்தப்படுத்தும் . என் வாயின் வார்த்தைகள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், கட்டியெழுப்புவதற்கும் மாத்திரமே பயன்படுத்த உம் பரிசுத்த ஆவியினால் எனக்கு அதிகாரம் தாரும் , ஒருபோதும் அழிக்கவோ அல்லது பெலவீனப்படுத்தவோ வேண்டாம். இயேசுவின் மாதிரியை பின்பற்றி இவ்வுலகிற்கு வெளிச்சமாய் இருக்க நான் விரும்புகிறேன், அதினால் மக்களை இருளிலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.