இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கர்த்தருடைய பந்தி கிறிஸ்தவர்களுக்கு ஒரு மிகவும் அருமையான நேரம். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க இயேசு செய்த நம்பமுடியாத தியாகத்தை நாம் நினைவுகூருகிறோம். கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பந்தியை அனுசரிக்கும் போது, நாம் கிறிஸ்துவின் ஒரே சரீரமாக, இந்த பூமியில் அவருடைய சரீர பிரசன்னமாக நாம் உருவாகிறோம் என்பதையும் நாம் உணர்கிறோம் (1 கொரிந்தியர் 10:17). நம்மில் ஒருவருக்கு என்ன நடந்தாலும் அது இயேசுவின் சரீரத்தின் மற்ற பகுதிகளுக்கு முக்கியமானது. ஒவ்வொரு முறையும் நாம் பந்தியை எடுத்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள கிறிஸ்துவின் சரீரமாகிய மற்ற அவயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அப்பத்தை எடுத்துக் கொள்ளும்போது, உலகில் இயேசுவை சரீர பிரசன்னமாக நாம் இவ்வுலகில் வாழ்வதற்கும், இன்னுமாய் இயேசுவுக்கும் நன்றி செலுத்துவதற்கும் உறுதியளிக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க சிலுவையில் தம் சரீரத்தை நமக்காக ஒப்புக்கொடுத்தார். இவற்றை நாம் நினைவுகூரும்போது, கர்த்தருடைய சரீரத்தை அடையாளம் கண்டு, அவர் நமக்காகச் செய்த அனைத்திற்காகவும் அவரைக் கனம்பண்ணுகிறோம்!
என்னுடைய ஜெபம்
பிதாவே , இயேசுவானவர் முதல்முறை மாம்ச சரீர பிரகாரமாக பூமியில் வாழ்ந்ததற்காக நன்றி. அவரது சரீரம் , சபையாக இரண்டாவது முறையாக வெளிப்படுத்தபட்டமைக்காக நன்றி. கிறிஸ்துவின் சரீரத்தின் மற்ற அவயங்களாகிய உமது மக்களை கனம் பண்ண எங்களுக்கு உதவியருளும். கிறிஸ்துவின் சரீரம் ஒன்றுகூடி வரும்போதும், உடைந்த உலகத்தில் இயேசுவின் சரீர பிரசன்னமாக ஊழியம் செய்ய நாங்கள் உறுதியளிக்கும்போதும் எங்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் அருளும் . நாம் கிறிஸ்துவின் சரீரத்தை கனப்படுத்த விரும்புகிறோம், எனவே இதை இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.