இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மில் பலர் நன்றி செலுத்தும் காலத்தை முடித்து விட்டு ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் காலத்திற்கு மாறும்போது, நன்றி செலுத்துவதற்கான மிக முக்கியமான காரணத்தை நாம் நினைவில் கொள்கிறோம்: இயேசுவானவர் மனித மாம்சத்தில் தேவனின் சாயலை வெளிப்படுத்தும்படியாக வந்ததை இவ்வுலகம் கொண்டாடுகிறது . எல்லாவற்றிற்கும் மேலாக, "வருகை ", குறிப்பாக, இயேசுவானவர் இப்பூமிக்கு வருவதை குறிக்கிறது. தேவன் நம்மை மிகவும் நேசித்தார், அவர் பிரதான மற்றும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசமாயிருப்பதையும், இன்னுமாய் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் தேவனாக இருப்பதை தவிர்த்து. அவர் நம் அருகில் வந்து இயேசுவின் மூலமாய் நம்மில் ஒருவராக இருக்கத் தேர்ந்தெடுத்தார். தேவன் பரிசுத்தமானவர், நமக்கு அப்பாற்பட்டவர் (ஏசாயா 6:1-6). ஆனாலும், அவருடைய இரக்கம் மற்றும் கிருபையின் காரணமாக அவர் இயேசுவின் மூலமாய் நம்மில் வாசம் செய்ய விரும்பினார் (ஏசாயா 57:15). இயேசுவானவர் ,அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அதனால் ஒரு ஊழியனாக தேவனின் கிருபையையும் அவருடைய மகத்துவத்தின் மூலமாய் நம்முடைய பாதையையும் காண முடிந்தது. (பிலிப்பியர் 2:5-11).
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே, எங்களை மிகவும் நேசித்ததற்காக உமக்கு நன்றி, இயேசுவின் மூலமாய் எங்களுடைய மரணத்திலே எங்களோடு இணைந்ததற்காக நன்றி . இயேசுவானவர் , எங்களிடையே வாழ்ந்து, தேவனைக்கு ஒப்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதை இவ்வுலகிற்கு காட்டியதற்காக நன்றி. இந்த கோணலும் மாறுபாடான உலகில் மனித மாம்சத்தில் வாழும் எங்கள் போராட்டத்தை அறிந்ததற்காக உமக்கு நன்றி. மரணத்தை ஜெயித்து , எங்களுடன் என்றென்றும் வாழ்வதற்காக நன்றி. இயேசுவின் காரணமாக, பிதாவே , எங்கள் நன்றியையும் ஸ்தோத்திரங்களையும் நீர் அறிய வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்! ஆமென்.