இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

2 கொரிந்தியர் முழுவதும் பவுலின் தொடர்ச்சியான கருப்பொருள்களில் ஒன்று, பெலவீனத்தில் தேவனுடைய பெலன் பூரணமாய் விளங்குகிறது . 1 கொரிந்தியரில், தேவனின் பெலன் ,ஞானம் மற்றும் வல்லமை ஆகியவை பொதுவாக பெலவீனம் மற்றும் அவமானத்தின் அடையாளமான சிலுவையில் நிரூபிக்கப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார் (1 கொரிந்தியர் 1:18-2:5). பவுல் ஒரு ஞானமில்லாதவர் அல்ல - அவர் சகித்துக் கொண்டதையும் கர்த்தருக்குச் ஊழியம் செய்ததையும் நினைவுகூருங்கள் (2 கொரிந்தியர் 11:24-27). அவருடைய பயிற்சி மற்றும் திறமைகள் எல்லாம் இருந்தாலும், அவர் திறமையானவராகவோ, புத்திசாலியாகவோ அல்லது தேவனுடைய ராஜ்யத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும் அளவுக்கு வலிமையானவராகவோ இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். எல்லோரும் அவரை வலிமையான மற்றும் சிறந்த ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், அவர் தனது நற்சான்றிதழ்களால் அவர்களை விஞ்ச முயற்சிக்கவில்லை - அவரால் முடிந்தாலும் கூட. அதற்குப் பதிலாக, நம்முடைய பற்றாக்குறையை நாம் அடையாளம் கண்டுகொள்ளும்போது, ​​தேவன் நம்முடைய பெலவீனத்தை ஏற்றுக்கொண்டு , நாம் அவருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது அதை வல்லமையாகப் பயன்படுத்துகிறார் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஊழியத்திற்கான "மகத்துவமுள்ள வல்லமை" "எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று " என்பதை நம் வாழ்க்கை ஜீவியத்தில் காண்பிக்க வேண்டும் (2 கொரிந்தியர் 4:7).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, நான் சோதனையில் இருந்தபோது நீர் என்னைப் பெலப்படுத்தியதற்காகவும் , கடினமான சூழ்நிலைகளில் எனக்கு ஞானத்தைக் கொடுத்ததற்காகவும் , நான் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது எனக்கு அதிகாரம் அளித்ததற்காகவும் , என் கையாளும் திறனை விட பெரிய வாய்ப்புகளில் என்னைப் பயன்படுத்தியதற்காகவும் உமக்கு நன்றி. உமது கிருபையால் நீர் என்னைக் இரட்சித்து தாங்கினீர்கள் என்பதை நான் அங்கீகரிக்கிறேன், அதனால் எனது இயல்பான திறன்களுக்கு அப்பாற்பட்ட வழிகளில் நான் ஊழியம் செய்ய முடியும். உம் மகிமையும் வல்லமையும் இது நடக்க உதவியது, எனவே நான் இயேசுவின் நாமத்தினாலே உம்மை துதித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து