இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
2 கொரிந்தியர் முழுவதும் பவுலின் தொடர்ச்சியான கருப்பொருள்களில் ஒன்று, பெலவீனத்தில் தேவனுடைய பெலன் பூரணமாய் விளங்குகிறது . 1 கொரிந்தியரில், தேவனின் பெலன் ,ஞானம் மற்றும் வல்லமை ஆகியவை பொதுவாக பெலவீனம் மற்றும் அவமானத்தின் அடையாளமான சிலுவையில் நிரூபிக்கப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார் (1 கொரிந்தியர் 1:18-2:5). பவுல் ஒரு ஞானமில்லாதவர் அல்ல - அவர் சகித்துக் கொண்டதையும் கர்த்தருக்குச் ஊழியம் செய்ததையும் நினைவுகூருங்கள் (2 கொரிந்தியர் 11:24-27). அவருடைய பயிற்சி மற்றும் திறமைகள் எல்லாம் இருந்தாலும், அவர் திறமையானவராகவோ, புத்திசாலியாகவோ அல்லது தேவனுடைய ராஜ்யத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும் அளவுக்கு வலிமையானவராகவோ இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். எல்லோரும் அவரை வலிமையான மற்றும் சிறந்த ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், அவர் தனது நற்சான்றிதழ்களால் அவர்களை விஞ்ச முயற்சிக்கவில்லை - அவரால் முடிந்தாலும் கூட. அதற்குப் பதிலாக, நம்முடைய பற்றாக்குறையை நாம் அடையாளம் கண்டுகொள்ளும்போது, தேவன் நம்முடைய பெலவீனத்தை ஏற்றுக்கொண்டு , நாம் அவருக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது அதை வல்லமையாகப் பயன்படுத்துகிறார் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஊழியத்திற்கான "மகத்துவமுள்ள வல்லமை" "எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று " என்பதை நம் வாழ்க்கை ஜீவியத்தில் காண்பிக்க வேண்டும் (2 கொரிந்தியர் 4:7).
Thoughts on Today's Verse...
One of Paul's recurring themes throughout 2 Corinthians is that God's strength is made perfect in weakness. In 1 Corinthians, he emphasized that the strength, wisdom, and power of God are shown in what is normally a sign of weakness and humiliation — the cross (1 Corinthians 1:18-2:5). Paul wasn't a wimp — remember all that he endured and kept on serving the Lord (2 Corinthians 11:24-27). He just knew that even with all his training and talent, he wasn't skilled, smart, or strong enough to do all that needed to be done for the Kingdom of God. As folks compared him with those who were supposed to be stronger and better teachers, he didn't try to outdo them with his credentials — even though he could. Instead, Paul knew that when we recognize our insufficiency, God takes our weakness and uses it powerfully when we offer ourselves to him. Our lives must show that the "all-surpassing power" for ministry "is from God and not from us" (2 Corinthians 4:7).
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, நான் சோதனையில் இருந்தபோது நீர் என்னைப் பெலப்படுத்தியதற்காகவும் , கடினமான சூழ்நிலைகளில் எனக்கு ஞானத்தைக் கொடுத்ததற்காகவும் , நான் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது எனக்கு அதிகாரம் அளித்ததற்காகவும் , என் கையாளும் திறனை விட பெரிய வாய்ப்புகளில் என்னைப் பயன்படுத்தியதற்காகவும் உமக்கு நன்றி. உமது கிருபையால் நீர் என்னைக் இரட்சித்து தாங்கினீர்கள் என்பதை நான் அங்கீகரிக்கிறேன், அதனால் எனது இயல்பான திறன்களுக்கு அப்பாற்பட்ட வழிகளில் நான் ஊழியம் செய்ய முடியும். உம் மகிமையும் வல்லமையும் இது நடக்க உதவியது, எனவே நான் இயேசுவின் நாமத்தினாலே உம்மை துதித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.
My Prayer...
Dear Heavenly Father, thank you for all those times you have strengthened me when I was under trial, given me wisdom in difficult situations, empowered me when I faced hardships, and used me mightily in opportunities greater than my ability to handle. I recognize that you saved and sustained me by Your grace so that I can serve in ways better beyond my natural abilities. Your glory and power enabled this to happen, so I praise and thank you in Jesus' name. Amen.